Best Viewed in Mozilla Firefox, Google Chrome

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடி – பிரச்சினையான நிலங்களுக்கேற்ற சிறப்பு தொழில்நுட்பங்கள் - Special technologies for problem soils for Transplanted puddled lowland rice

அ). பொரபொரப்பான மண் வகைகளுக்கு: மாடுகள் அல்லது வேலை செய்பவர்களின் கால்கள் புதையாமல் இருக்க, மூன்று ஆண்டுகளூக்கு ஓரு முறை, 400 கிலோ கல் உருளை அல்லது கற்கள் நிரப்பிய டிரம் ஆகியவற்றை சீரான ஈரப்பதம் (சுமாராக 13-18%) உள்ள போது 8 முறை உருட்டி கெட்டிப்படுத்தவும்

ஆ) 8.5 க்கு மேல் pH உள்ள உவர் நிலங்களில், சீரான ஈரப்பதத்தில் உழுதபின், தேவையான ஜிப்சம் அளவில் 50% இட்டு, நீர் நிரப்பி, கரைந்த உப்புகள் வெளியெறுமாறு வடிக்கவும். எக்டருக்கு 5 டன் பசுந்தழைகளை நடவுக்கு 10-15 நாட்கள் முன்னதாக இடவும். எக்டருக்கும் 37.5 கிலோ சிங்க் சல்பேட்டை, 75 கிலோ வருமாறு மணலுடன் கலந்து நிலத்தில் சீராக பரப்பபவும் (மண்ணில் கலக்குமாறு இட வேண்டாம்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடி – நிலம் தயாரித்தல் - Main field preparation for Transplanted puddled lowland rice

நிலம் தயாரித்தல்

1. நிலம் தயாரிக்கும் போது நீரை சேமிக்கும் விதமாக, கோடைகாலத்தில் நிலத்தை உழவு செய்யவும்.

2. உழவுக்கும் 2 நாட்களுக்கு முன் நீர் பாய்ச்சி நன்கு ஊற விடவும். நிலத்தின் மேற்பகுதி நீரால் மூடியிருக்குமாறு பாசனம் செய்யவும்

3. சேறு கலக்கும் போது, 2.5 செமீ ஆழம் நீரை பராமரிக்கவும்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடி – உலர் நாற்றங்கால் - Dry nursery for Transplanted puddled lowland rice

1. நன்கு புழுதியாக வயலை உழவும்.

2. மண் அல்லது வண்டல் மண் வகைகள் ஏற்றது

3. பரப்பளவு – 20 செண்ட்

4. பாத்திகளின் அகலம் 1 முதல் 1.5 மீட்டர் மற்றும் மண் வகை, சரிவுக்கேற்ப பாத்திகளின் நீளம் இருக்கலாம். மேட்டுப் பாத்திகள் அமைப்பது சிறந்தது.

5. ஈர நாற்றங்கால் போலவே விதையளவு மற்றும் விதை நேர்த்தி ஆகியவை செய்யவும்

6. காய்ந்த விதைகளை விதைக்கவும். விதைகளை மண் அல்லது தூளான எரு கொண்டு மூடவும்

7. மண் முழுமையாக நனையும்படி நீர் பாய்ச்சவும்.

8. நான்கு இலை பருவம் நடவு செய்ய ஏற்றது.

9. வாய்க்கால் பாசனப் பகுதிகளில் நீர் வரத்து தாமதப்படும் நேரங்களில் இந்த முறை மிகவும் ஏற்றது.

ஈர நாற்றங்காலில் சத்துக்கள் நிர்வாகம் - Nutrient management in wet nursery

1. 20 செண்ட் நாற்றங்காலில், நன்கு மக்கிய எரு அல்லது கம்போஸ்ட்டை சீராக பரப்பவும்.

2. வளம் குறைவான மண் வகைகளில், 20-25 நாட்களில் நாற்று பறிக்கக்கூடிய சூழலில், டி.ஏ.பி பரிந்துரைக்கப்படுகிறது.

3. கடைசி சேறு கலக்கலின் போது, 40 கிலோ டி.ஏ.பி அல்லது நேர் உரங்களான 16 கிலோ யூரியா மற்றும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட் ஆகியவை இடவும்.

4. 20-25 நாட்களில் நாற்று பறிக்கக்கூடிய சூழலில், நாற்று பறிக்க 10 நாட்கள் இருக்கையில், டி.ஏ.பி இடவும்.

5. வேர் அறுந்து போக வாய்ப்புள்ள களிமண் வகைகளில், விதைத்து 10 நாட்கள் கழித்து, செண்ட் ஒன்றுக்கு 4 கிலோ ஜிப்சம் மற்றும் 1 கிலோ டி.ஏ.பி இடவும்.

முளை கட்டிய விதைகளை ஈர நாற்றங்காலில் விதைத்தல் - Sowing of sprouted seeds in wet nursery

மெல்லிய நீர்ப்படலம் உள்ள நாற்றுப் பாத்தியில் முளைகட்டிய விதைகளை சீராக பரப்பவும்.

நீர் நிர்வாகம்

1. விதைத்த 18 – 24 மணி நேரத்தில் நீரை வடிக்கவும்

2. நாற்றுப் பாத்தியில் நீர் தங்காமல் கவனமாக இருக்க வேண்டும்

3. 3 – 5 நாட்களில் மண்ணில் போதுமான நீர் உறுஞ்சுமாறு நீர் பாய்ச்சவும். 5 நாட்களுக்குப் பிறகு, நாற்றின் உயரத்திற்கேற்ப, 1.5 செமீ உயரம் இருக்குமாறு பாசனம் செய்யவும்.

4. அதன் பின், 2.5 செமீ உயரத்தில் நீர் இருக்குமாறு பராமரிக்கவும்

களை நிர்வாகம்

5. 3 அல்லது 4-ம் நாளில், முளைக்கும் முன் கட்டுப்படுத்தும் களைக்கொல்லிகளில் ஒன்றான பிரடிளாக்ளோர் + சபேனர்-ஐ எக்டருக்கு 0.3 கிலோ இடவும். அது மறையுமாறு, மெல்லிய நீர்ப்படலத்தை பராமரிக்கவும். இதன் மூலம் களைகள் முளைப்பதை கட்டுப்படு

ஈர நாற்றங்காலுக்கு நாற்றுப்படுகை அமைத்தல் - Forming Seedbeds for wet nursery

1. 2.5 மீட்டர் அகலமுடைய பாத்திகளை, 30 செமீ அகல வாய்க்கால்களுடன் அமைக்கவும்.

2. மண் வகை மற்றும் சரிவுக்கேற்ப பாத்திகளின் நீளம் 8 முதல் 10 மீட்டர் இருக்கலாம்

3. வாய்க்காலிருந்து எடுத்த மண் கலவையை பாட்த்திகளில் நிரவலாம் (அ) வாய்க்காலில் கனமான கல்லை இட்டு இழுப்பதன் மூலம் பள்ளத்தை உருவாக்கி, பாத்தியை மேடாக்கலாம்.

4. பாத்தியை சமப்படுத்தி, அதிக நீர் வடிகாலில் வடியுமாறு அமைக்க வேண்டும்.

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடி – ஈர நாற்றங்கால் - Wet nursery for Transplanted Puddled Lowland Rice

நாற்றங்கால் பரப்பளவு

பாசன வசதிக்கு அருகில், 20 செண்ட் (800 சமீ) நிலத்தை தேர்வு செய்யவும் (ஒரு எக்டருக்கு)

விதையளவு:

நீண்டகால இரகங்களுக்கு – 30 கிலோ

மத்திமகால இரகங்களுக்கு – 40 கிலோ

குறுகியகால இரகங்களுக்கு – 60 கிலோ

வீரிய ஒட்டு இரகங்களுக்கு – 20 கிலோ

ஈர நாற்றங்காலுக்கு விதை நேர்த்தி - Seed treatment for wet nursery

1. கார்பெண்டசிம் (அ) பைரோக்யுலான் (அ) டிரைசைக்ளோஸோல் – ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் / லிட்டர் கரைசலில், விதைகளை 10 மணி நேரம் ஊற வைத்து, எஞ்சிய நீரை வடிக்கவும்

2. இவ்வாறு செய்யப்படும் நேர்த்தி, நாற்றை பாதிக்கும் நோய்களான குலைநோய் போன்றவற்றிலிருந்து 40 நாட்கள் வரை பாதுகாப்பளிக்கும்.. மற்ற முறைகளைவிட சிறந்தது

3. விதைகளை உடனே விதைக்க வேண்டியிலிருந்தால், ஊரிய விதைகளை சாக்கால் மறைத்து இருட்டில் 24 மணி நேரம் வைத்திருந்து முளைகட்டிய பின் விதைக்கவும்

4. சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் விதை நேர்த்தி: சூடோமோனாஸ் ப்ளாரசன்ஸ் (pf1) @ 10 கிராம்/கிலோவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் அதிக நீரை வடிகட்டி, 24 மணி நேரம் முளைகட்டிய பின் விதைக்கவும்.

5. அஸோஸ்பைரில்லம் விதை நேர்த்தி: 3 பாக

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடி- Transplanted Puddled Lowland Rice

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் இரண்டு வகையான நாற்றங்கால் முறைகள் கடைபிடிக்கின்றன

1. ஈர நாற்றங்கால்

2. உலர் நாற்றங்கால்

23
Sep

நறுமண அரிசி - Aromatic Rice

நறுமண அரிசி - Aromatic Rice

நறுமண அரிசியில், சமைக்கும் போது வாசனை அளிக்கும் 2 அசிட்டைல் 1-1 பைரோலின் (2 acetyl 1-1 pyroline) என்ற மூலக்கூறு அதிகமாக காணப்படுகிறது. இவை அரிசியின் இரகத்தை பொருத்து மாறுபடும். நறுமணம் அற்ற அரிசிகளை சமைக்கும்போது, 2 அசிட்டைல் 1-1 பைரோலின் உள்ள பண்டனஸ் லேட்டிபோலியஸின் 2-3 இலைகளை சேர்ப்பதன் மூலம் நறுமணத்தை பெற முடியும்.

Copy rights | Disclaimer | RKMP Policies