Best Viewed in Mozilla Firefox, Google Chrome

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சத்துகள் பற்றாக்குறை அல்லது விஷத்தன்மை

1. தழைசத்து பற்றாக்குறை: செடிகள் உயரம் குறைந்து, கீழ் இலைகள் முதலில் மஞ்சளாக தோன்றும். தீவிரமான பற்றாக்குறை இருந்தால், இலைகள் பழுப்பு நிறமாக மாறி பின்னர் இறந்துவிடும். அறிகுறிகள் முதலில் இலை நுனியில் தோன்றி, நடு நரம்புக்கு பரவி, பின்னர் முழு இலையும் பாதிக்கப்பட்டு இறந்துவிடும்.

2. சாம்பல்சத்து பற்றாக்குறை: இளம் நீலமயமான பச்சை இலைகள், ஒழுங்கற்ற முதிர் இலைகள், புள்ளிகள் தோன்றுதல், மணி பிடிப்பு குறைதல், வைக்கோல் வலுவிலந்து, செடிகள் சாய்ந்து விடுதல்.

3. மக்னீஷிய பற்றாக்குறை: இலைகளில் புள்ளிகள் தோன்றுதல், வெள்ளை நுனிகள்

4. இரும்பு விஷத்தன்மை: கீழ் இலைகளில், நுனிகளில் தோன்றி அடிவரை பரவும் பழுப்பு புள்ளிகள், பின்னர் பச்சை அல்லது ஆரஞ்ச

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சிங்க் சல்பேட் நிர்வாகம்

1. 25 கிலோசிங்க் சல்பேட்டை 50 கிலோ காய்ந்த மணலுடன் கலந்து, நடவு செய்யும் முன் இடவும்.

2. வயலில் பசுந்தாள் பயிர்கள் (எக்டருக்கு 6.25 கிலோ) அல்லது ஊட்டமேற்றிய தொழு உரம் இட்டிருந்தால், 12.5 கிலோ போதுமானது.

3. பற்றாக்குறை அறிகுறிகள் தென்பட்டால், 0.5% சிங்க் சல்பேட் + 1.0 % யூரியா ஆகியவற்றை, இலை வழி ஊட்டமாக 15 நாட்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரை தெளிக்கவும்.

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் மணிச்சத்து இடுதல்

  • மணிச்சத்தை அடியுரமாக இடவும்
  • பசுந்தாள் பயிர் இட்ட வயலில், குறைந்த செலவிலான ராக் பாஸ்பேட்டை பயன்படுத்தலாம். ராக் பாஸ்பேட் இட்ட வயலில், அடுத்த போகத்தில் மணிச்சத்து இட வேண்டிய அவசியம் இல்லை.  
  • சூப்பர் பாஸ்பேட் அல்லது டி.ஏ.பி ஆகியவற்றை தனியாக இடுவதை போலவே, வெவ்வேறு அளவுகளில் (75:25 அல்லது 50:50) ராக் பாஸ்பேட் + சூப்பர் (அ) டி.ஏ.பி இடுவதும் சமமான நன்மை தரக்கூடியவை.

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில், இலை வண்ண அட்டையைக் (LCC) பயன்படுத்தி, தழைசத்தை நிர்வாகம் செய்தல்

1. இலை வண்ண அட்டை மதிப்பீட்டின் அடிப்படையில் உரமிடும் நேரம் தீர்மானிக்கப்படுகிறது

2. நடவுமுறை வயலில் நடவு செய்த 14-ம் நாளிலும், நேரடியாக விதைத்த வயலில் விதைத்த 21 நாட்களிலும் கணக்கீடு செய்யவும்.

3. கதிர்கள் வெளியாகும் வரை, இவ்வாறாக வாரம் ஒரு நாள் கணக்கீடு செய்யவும்

4. மேலிருந்து, முழுவதும் விரிந்த மூன்றாம் இலையை மாதிரியாக கொண்டு, கணக்கிடவும்

5. காலை வேலையில் (8-10 மணி), இலையின் வண்ணத்தை அட்டையில் உள்ள வண்ணத்துடன் ஒப்பிடவும்

6. 10 இடங்களில் கணக்கிடவும்

7. தழைசத்துக்கு குறைந்த அளவு கட்டுப்படும் வெள்ளைப் பொன்னி பொன்ற இரகங்களுக்கு இலை வண்ண அட்டை மதிப்பீடு 3.0: பிற இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டுகளுக்கு, இது 4.0 வாக நிர்ண

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் தழை மற்றூம் சாம்பல் சத்துக்களை பிரித்து இடுதல்

1. அடியுரம், கிளைகள் வெடித்தல், கரு உருவாதல், கதிர் வெளியாதல் ஆகிய நான்கு பருவங்களில், தழை மற்றும் சாம்பல் சத்துக்களை சமமாக பிரித்து இடவும்

2. கிளைகள் வெடித்தல், கரு உருவாதல் ஆகிய இரண்டும் முக்கிய பருவங்கள்: பரிந்துரைக்கப்பட்ட உர அளவுகளை குறைக்கக் கூடாது

3. இலை வண்ண அட்டையைக் (LCC) கீழ்கண்ட வழிமுறையில் பயன்படுத்தி, தழைசத்தை நிர்வாகம் செய்யலாம்.

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சத்து நிர்வாகம்

1. எரு இடுதல்: எக்டருக்கு 12.5 டன் மக்கிய எரு அல்லது கம்போஸ்ட் அல்லது 6.25 டன் பசுந்தழைகள்

2. வயலில் பசுந்தாள் பயிர்கள் (எக்டருக்கு 20 கிலோ) வளர்த்திருந்தால், 15 செமீ ஆழத்தில் இருக்குமாறு, தழை அமுக்கும் கருவி அல்லது டிராக்டர் கொண்டு மடக்கி உழவு செய்யவும்

3. பசுந்தழைக்கு பதிலாக, கரும்பு சக்கை, தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

கழிவுகளை உழுதல்:

1. எக்டருக்கு 22 கிலோ யூரியாவை, முன் சாகுபடியின் கழிவை மடக்கி சேறு ஒட்டும் போது இடவும் (கழிவுகள் மக்கும் போது ஏற்படும் தழைசத்து இழப்பை ஈடுகட்ட இது உதவும்.

2. அடுத்த பயிர் நடவு செய்ய குறைந்தபட்சம் 10 நாட்கள் இருக்கும் போது இதை செய்யவும். இரண்டாவது போக சாகுபடிக்கும் முதல் போக சாகுபடிக்கும் இடையே அத

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் வயதான நாற்றுகள் நிர்வாகம்

1. குறைந்த அல்லது மத்திம வள மண்ணூக்கான இடைவெளி பரிந்துரையை பின்பற்றவும்

2. ஒரு குத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாற்றுகள் மட்டும் நடவு செய்யவும்

3. வயதான நாற்றுகளை நடவு செய்யும்போது, கிளைகள் உருவாகுவதற்கு தடையாக இருக்கும் கொத்து நடவை தவிர்க்கவும்

4. புதிய கிளைகளில் மட்டுமே கதிர்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. திறன் குறைவான கதிர்கள், தாய் கிளையிலிருந்து 3 வாரங்கள் கழித்து உருவாகி, பின் அறுவடைக்கு முன் மறைந்துவிடும்.

5. அதிக கிளைகள் உருவாவதை ஊக்குவிக்க, அடியுரமாக இடும் தழைசத்தை பரிந்துரைக்கு 50% மேல் இடவும். பின்னர் அடுத்தடுத்த உரங்களை பரிந்துரை அளவிலும் இடவும்

இடைவெளி நிரப்புதல்

இடைவெளி ஏதும் இருந்தால், நடவு செய்த 7-10 நாட்களுக்

 

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் நாற்று நடவு செய்தல் - Planting seedlings in the main field for Transplanted puddled lowland rice

1. குறுகியகால இரங்களுக்கு குத்துக்கு 2-3 நாற்றுகள், நீண்டகால இரகங்களுக்கு குத்துக்கு 2 நாற்றுகளும் நடவு செய்யவும்

2. மேலான நடவு (3 செமீ ஆழம்) விரைவான வளர்ச்சி மற்றும் அதிக கிளைகள் கிடைக்க வழி செய்யும்

3. ஆழமான நடவு (5 செமீ ஆழத்திற்கு மேல்) தாமதமான வளர்ச்சி மற்றும் கிளைகள் குறைய காரணமாகிவிடும்.

4. வரிசையாக நடவு செய்தால், ரோட்டரி அல்லது பிற களைக்கருவிகள் ஆகியவை பயன்படுத்த இயலும்

5. ரோட்டரி களைக்கருவிகள் பயன்படுத்த, வரிசைகளுக்கிடையில் 20 செமீ விடவும்.

6. நடவு செய்த7 அல்லது பத்தாவது நாளில், நாற்று வளராத இடைவெளிகளை நிரப்பவும்.

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் உயிர் உர வேர் நனைத்தல் நேர்த்தி - Root dipping for Transplanted puddled lowland rice

1. எக்டருக்கு தலா 5 பாக்கட் (1000 கிராம்) அஸோஸ்பைரில்லம், 5 பாக்கட் (1000 கிராம்) பாஸ்போபாக்டீரியா (அல்லது) 10 பாக்கட் (2000 கிராம்) அஸோபாஸ் ஆகியவற்றை 40 லிட்டர் நீரில் கரைத்து, நடவு செய்யும் முன் 15-30 நிமிடங்களுக்கு நாற்றின் வேர்ப்பகுதியை நனைத்து நடவும்.

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில், பயிர் பச்சை திரும்புதல் - Crop Stand establishment for Transplanted puddled lowland rice

நாற்றின் சரியான வயது

1. குறிகியகால இரகங்களுக்கு 18-22 நாட்கள், மத்திமகால் இரகங்களுக்கு 25-30 நாட்கள், மற்றும் நீண்டகால இரகங்களுக்கு 35-40 நாட்கள்

நாற்று பறித்தல்

1. சரியான வயதில் (4 இலை பருவம்) நற்று பறிக்கவும்

2. மூன்று இலை பருவத்திலும் பறிக்கலாம். பயிர் நிலைக்கும் பருவத்தில், நிலத்தை நன்கு சமப்படுத்தி, மெல்லிய நீர்ப்படலம் கொண்டு பராமரித்தால், இவை அதிக கிளைகளை அளிக்கும் (1.8, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை – அரிசி - SRI பகுதியைகாணவும்).

3. ஐந்து இலைகளுக்கு மேற்பட்ட நாற்றுகளை நடவு செய்தால், பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்பபடும். இவை வயதான நாற்றுகள் எனப்படும். இழப்புகளை ஈடு செய்யும் வகையில், இவற்றை நிர்வாகம் செய்ய சிறப்பு வ

Copy rights | Disclaimer | RKMP Policies