Best Viewed in Mozilla Firefox, Google Chrome

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் அறுவடை

PrintPrintSend to friendSend to friend

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் அறுவடை

1. பயிரின் சராசரி வயதை பொறுத்து, அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் நீரை வடித்தால், அறுவடை எளிதாக இருக்கும்

2. 80% கதிர்கள் வைக்கோல்நிறத்திற்கு வரும்போது, பயிர் அறுவடைக்கு தயாராகிறது. சில இரகங்களில், இந்த நிலையிலும் பயிர் பச்சையாகவே இருக்கும்

3. நன்கு முற்றிய கதிரை தேர்ந்தெடுத்து, நெல்லை உதிர்த்து பார்க்கவும். அரிசி திடமாகவும் தெளிவாகவும் இருந்தால், பால் முற்றும் தறுவாயில் உள்ளது என அறியலாம்.

4. இந்நிலையில் அதிகமான மணிகள் இருந்தால், பயிர் அறுவடைக்கு தயார். பயிரை அறுவடை செய்து, கதிரடித்து, மணிகளை தூற்றவும்.

5. சேமிக்கும் முன் மணிகளை 12% ஈரப்பதத்திற்கு காய வைக்கவும். 14% ஈரப்பத நிலையில்தான் மகசூலை கணிக்கவும், பிற இரகங்களுடன் ஒப்பிடவும் வேண்டும்.

6. பருவமழை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பிருந்தால், அறுவடைக்கு ஒரு வாரம் முன் 20% உப்புக் கரைசலை தெளிப்பதன் மூலம் அறுவடையை 3-4 நாட்கள் வரை துரிதப்படுத்தலாம்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies