Best Viewed in Mozilla Firefox, Google Chrome

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் நீர் நிர்வாகம்

PrintPrintSend to friendSend to friend

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் நீர் நிர்வாகம்

1. சேறாக்குதல் மற்றும் நிலம் சமப்படுத்துதல் ஆகியவை நீர் தேவையை குறைக்கும்

2. கேஜ் வீல் கொண்ட டிராக்டர் மூலம் உழுது நீர் இழப்பை 20% வரை குறைக்கலாம்.

3. 2.5 செமீ உயரம் நீரை நிறுத்தி, குறைந்த நார்ப்பொருள் கொண்ட பசுந்தாள் பயிரான சணப்பை 7 நாட்களூக்கும், அதிக நார்ப்பொருள் கொண்ட கொழுஞ்சி போன்ற பயிர்களை 15 நாட்களுக்கும் மக்க வைக்கவும்.

4. நடவு செய்யும் போது, 2 செமீ நீர் மட்டும் வைக்கவும்: ஏனென்றால், அதிக ஆழம் இருந்தால், நாற்றுகள் ஆழமாக நடப்பட்டு, கிளைத்தல் குறையும்

5. நடவு செய்த 7 நாட்கள் வரை 2 செமீ நீர் பராமரிக்கவும்

6. பயிர் நிலைத்த பிறகு, பாய்ச்சலும் காய்ச்சலுமான நீர் பாய்ச்சல் சிறந்தது. பயிர்க்காலம் முழுவதும் இதை கடைபிடிக்க வேண்டும்.

7. வேர் பிடிக்கும் மற்றும் கிளை வெடிக்கும் தருணங்களில் நீர் பற்றாக்குறை இருந்தால், கிளைகள் குறைதல், வளர்ச்சி குறைதல் மற்றும் மகசூல்குறைதல் ஏற்படும்.

8. கரு உருவாதல், கதிர் வெளிப்படுதல், பூ பூத்தல் ஆகியவை முக்கிய தருணங்களாகும். இத்தருணங்களில், முழு அளவில் ஈரம் இருக்கும் வகையில் பரிந்துரைக்கப்பட்ட நேர இடைவெளியில், குறைக்காமல் பாசனம் செய்ய வேண்டும்.

9. கதிர் வெளியாகும் மற்றும் முற்றும் தருணங்களில், 5 செமீக்கு மேல் நீர் இருந்தால், வேர் அழுகல், பூ பூக்க தாமதம், விரைவில் இலை முற்றுதல், மணிகள் எண்ணிக்கை குறைதல், குறைந்த மகசூல் ஆகியவை ஏற்படும்.

10. அதிக நீர் வடியுமாறு போதுமான வடிகால் வசதிகள் செய்யவும் அல்லது சரியான பாசன இடைவெளியை (நீர் மறைந்து 1 நாள் கழித்து) பராமரிக்கவும். அறுவடைக்கு 15 நாட்கள் முன் கடைசி பாசனம் செய்யவும்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies