Best Viewed in Mozilla Firefox, Google Chrome

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் களை நிர்வாகம்

PrintPrintSend to friendSend to friend

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் களை நிர்வாகம்

1. ரோட்டரி களைக்கருவியை நடவு செய்த 15 நாட்களிலிருந்து, 10 நாட்காளுக்கு ஒரு முறை பயன்படுத்தவும். இதனால், கூலியாள் செலவு குறைதல், வேர்ப்பகுதி மண்ணில் காற்றோட்டம் அதிகரித்தல், வேர் வளர்ச்சி அதிகரித்தல், மணி முற்றுதல் அதிகரித்து மககூல் கூடுதல் ஆகியவை ஏற்படும்.

2. நெல் + அசோலா இணைந்த சாகுபடி, பசுந்தாள் வளர்ப்பு (ஈர முறை சாகுபடி, 2.5 & 2.6 பகுதிகளில் விவரிக்கப்பட்டுள்ளது) ஆகிய முறைகளால் களைகளை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.

3. கோடை உழவு, மழைக்கு பிந்தைய கால ஸாகுபடி ஆகியவை களைகளை குறைக்கும்

முளைக்கும் முன் கட்டுப்படுத்தும் களைக்கொல்லிகள்

1. எக்டருக்கு 1.25 கிலோ பூட்டாக்ளோர் (அ) 0.4 கிலோ அநிலோபாஸ் ஆகியவை இடவும். இதற்குப் பதிலாக, 0.6 கிலோ பூட்டாக்ளோர் + 0.75 கிலோ 2,4 DEE, அல்லது அநிலொபாஸ் + 2,4 DEE கலவைகளை, நடவுக்கு 30-35 நாட்களுக்கு பின், கை களை எடுத்த பிறகு இடவும்

2. எந்த களைக்கொல்லியும், பயன்படுத்தும் முன் 50 கிலோ காய்ந்த மணலுடன் (நடவு செய்த 3-4 நாட்களில்), வயலில் சீராக இடவும்.அடுத்த இரண்டு நாட்களுக்கு நீரை வடிக்கக் கூடாது அல்லது புதிதாக பாசனம் செய்யக்கூடாது.

முளைத்தபின் கட்டுப்படுத்தும் களைக்கொல்லிகள்

1. முளைக்கும் முன் கட்டுப்பபடுத்தும் களைக்கொல்லிகள் இடாமல் இருந்தால், நடவு செய்த 15 நாட்களில் கையால் களை எடுக்கவும்

2. 2,4-D சோடியம் உப்பு (பெர்னோக்சான் 80% நனையும் தூள் ) , 625 லிட்டர் நீரில் கரைத்து, நடவு செய்த 3 வாரங்கள் கழித்து அல்லது, களைகள் 3-4 இலைகள் கொண்டிருக்கும் போது தெளிக்கவும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
http://agritech.tnau.ac.in/agriculture/agri_cropproduction_cereals_rice_tranpudlow.html
Copy rights | Disclaimer | RKMP Policies