Print
Send to friendநடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் வேம்பு அல்லது தார் பூசிய யூரியா பயன்படுத்துதல்
- யூரியாவை 20% சத அளவு வேம்பு விதை அல்லது வேப்பம் பிண்ணாக்குடன் கலக்கவும். யூரியாவுடன் கலக்கும் முன், வேப்பம் பிண்ணாக்கை 2 மிமி சல்லடையில் சலிக்குமாறு தூளாக்கவும். வயலில் இடும் முன் இரவு முழுவதும் வைத்திருக்கவும் (அல்லது) யூரியாவை ஜிப்சத்துடன் 1:3 விகிதத்தில் கலக்கலாம் (அல்லது) ஜிப்சம் மற்றும் வேப்பம் பிண்ணாக்குடன் 5:4:1 விகிதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.
- 100 கிலோ யூரியாவிற்கு, 1 கிலோ தாரை, 1.5 லிட்டர் மண்ணெண்ணை ஆகியவற்றை கலந்து மிதமான தீயில் இளக்கவும். இதில், குச்சியை பயன்படுத்தி யூரியாவை நன்கு கலக்கவும். பாலித்தீன் பாயில் நிழலில் காய வைக்கவும். இக்கலவையை ஒரு மாதாம் வரை வைத்திருந்து, அடியுரமாக பயன்படுத்தலாம்.