Best Viewed in Mozilla Firefox, Google Chrome

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில், இலை வண்ண அட்டையைக் (LCC) பயன்படுத்தி, தழைசத்தை நிர்வாகம் செய்தல்

PrintPrintSend to friendSend to friend

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில், இலை வண்ண அட்டையைக் (LCC) பயன்படுத்தி, தழைசத்தை நிர்வாகம் செய்தல்

1. இலை வண்ண அட்டை மதிப்பீட்டின் அடிப்படையில் உரமிடும் நேரம் தீர்மானிக்கப்படுகிறது

2. நடவுமுறை வயலில் நடவு செய்த 14-ம் நாளிலும், நேரடியாக விதைத்த வயலில் விதைத்த 21 நாட்களிலும் கணக்கீடு செய்யவும்.

3. கதிர்கள் வெளியாகும் வரை, இவ்வாறாக வாரம் ஒரு நாள் கணக்கீடு செய்யவும்

4. மேலிருந்து, முழுவதும் விரிந்த மூன்றாம் இலையை மாதிரியாக கொண்டு, கணக்கிடவும்

5. காலை வேலையில் (8-10 மணி), இலையின் வண்ணத்தை அட்டையில் உள்ள வண்ணத்துடன் ஒப்பிடவும்

6. 10 இடங்களில் கணக்கிடவும்

7. தழைசத்துக்கு குறைந்த அளவு கட்டுப்படும் வெள்ளைப் பொன்னி பொன்ற இரகங்களுக்கு இலை வண்ண அட்டை மதிப்பீடு 3.0: பிற இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டுகளுக்கு, இது 4.0 வாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

8. பத்தில் ஆறு மதிப்பீடுகள் குறைவான இலை வண்ண அட்டை மதிப்பீட்டை காட்டினால், கோடை பருவத்தில் எக்டருக்கு 35 கிலோ அல்லது குளிர் பருவத்தில் 30 கிலோ தழைசத்தும், ஒவ்வொரு முறையும் இட வேண்டும்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
Dr.RM Kumar, DRR
Copy rights | Disclaimer | RKMP Policies