Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இலைப்பேன் (Thrips)

PrintPrintSend to friendSend to friend

இலைப்பேன் (Thrips)

1. பொதுப்பெயர் -திரிப்ஸ்

2. அறிவியல் பெயர் - ஸ்டென்க்கோடோதிரிப்ஸ் பைபார்மிஸ்

3. உள்ளூர் பெயர் - இலைப்பேன்

இலைப்பேன் தாக்குதலின் அறிகுறிகள் (Symptoms of damage of Thrips)

  • மென்மையான இலைகள் கிழிந்து விடுவதுடன் அவற்றிலுள்ள சத்தையும் உறிஞ்சிவிடுதல்
  • இளம் நாற்றுகளின் இலைகளில் மஞ்சள் அல்லது வெள்ளை நிற கோடுகள் தோன்றுதல்
  • இலையின் நுனியிலிருந்து அடிவரை இலை சுருண்டு காணப்படுதல்

இலைப்பேன் நாற்றங்காலுக்கும், நடவு செய்த வயலிலும் சேதத்தினை ஏற்படுத்தும்

இலைப்பேனினை இனங்கண்டறிதல் (Identification of Thrips)

  • வயது முதிர்ந்த பூச்சிகள் அடர்ந்த பழுப்பு நிறத்துடன் காணப்படும்

இலைப்பேனைக் கட்டுப்படுத்துதல் (Management of Thrips)

நாற்றங்காலிலேயே கீழ்க்கண்ட ஏதாவதொரு பூச்சிக்கொல்லி மருந்தினைத் தெளிக்கவும்

  • பாஸ்பாமிடான் 40 SL – 50 மிலி
  • மோனோகுரோட்டோபாஸ் 36 SL -40 மிலி
  • என்டோசல்பான் 35 EC - 80 மிலி

நடவு செய்த வயலில் கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கவும்

பாஸ்பாமிடான் 40 SL- 300 ml

மோனோகுரோட்டாபாஸ் 36 SL 30 ml

File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
Mr.Chaitanya, DRR
Copy rights | Disclaimer | RKMP Policies