Best Viewed in Mozilla Firefox, Google Chrome

மாவுப்பூச்சி (Mealybug)

PrintPrintSend to friendSend to friend

மாவுப்பூச்சி (Mealybug)

1. பொதுப்பெயர்- மீலி பக்

2. அறிவியல பெயர் – பிரிவெனியா ரெகி

3. உள்ளூர் பெயர்-- மாவுப்பூச்சி

மாவுப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Damage of Mealybug)

  • அதிக அளவிலான பூச்சிகள் இலையின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு சத்தினை உறிஞ்சி விடுதல்
  • செடிகள் சத்தினை இழந்து, மஞ்சள் நிறமாக மாறி வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் செடிகளில் வட்டவடிவத்திட்டுகளும் காணப்படும்

மாவுப்பூச்சியினை இனங்கண்டறிதல் ((Identification of Mealybug)

  • முதிர்ந்த பூச்சிகள் - சிறியதாக, மென்மையான உடலுடனும், சிவப்பு கலந்த வெள்ளை நிறத்துடன் இறக்கைகளின்றி உரோமத்தினால் மூடப்பட்டு காணப்படும்

மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்துல் (Management of Mealybug )

  • வயலை தயார் செய்யும்போது வரப்புகளில் உள்ள புற்களை பிடுங்கிவிடவேண்டும்
  • பாதிக்கப்பட்ட செடிகளை பிடுங்கி அழித்துவிட வேண்டும்
  • கீழ்க்கண்ட ஏதாவதொரு பூச்சிக்கொல்லியினை மாவுப்பூச்சிகளின் தாக்குல் ஆரம்பிக்கும்பொழுது தெளிக்கவேண்டும்
  • டிமெத்தோயேட் 30 EC ஐ ஒரு ஹெக்டேருக்கு 500 மி.லி என்ற வீதத்தில்
  • மெத்தில் டெமீடான் 25 EC ஒரு ஹெக்டேருக்கு 500 மி.லி என்ற வீதத்தில்
  • மாவுப்பூச்சியின் இயற்கை எதிரிகளான சைம்னஸ், அனாடிரைக்கஸ் பிக்மேயஸ், மெபாகிரைமஸ் என்சிபர் போன்ற உயிரிகளைப் பாதுகாத்தல்
File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies