Best Viewed in Mozilla Firefox, Google Chrome

புகையானைக் கட்டுப்படுத்துதல் (Management of Brown plant leafhopper)

PrintPrintSend to friendSend to friend

புகையானைக் கட்டுப்படுத்துதல் (Management of Brown plant leafhopper)

  • புகையானின் தாக்குதலுக்கு எதிர்ப்புசக்தியுடைய நெல் இரகங்களான அருணா, ஏ.டி.ட்டி 36, கோ42, கோ 46, ஐ.ஆர் 36, ஐ.ஆர் 7 போன்ற நெல் இரகங்களை சாகுபடி செய்தல்.
  • நெருக்கமாக நடவு செய்யாமல் இருத்தல்
  • பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு 2.5 மீட்டர் நீளத்திற்கும் 30 செமீ இடம் விடுதல்
  • அதிகப்படியாக நைட்ரஜன் உரங்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்தல்
  • அடிக்கடி வயலில் தண்ணீரை வடித்து விடுவதன் மூலம் நீர்ப்பாசனத்தினை குறைத்தல்.
  • இரவு நேரங்களில் விளக்குப்பொறிகளை உபயோகித்தல்.
  • புகையானின் இயற்கை எதிரிகளான லைகோசா சூடோஆனுலேட்டா, கிர்டோரைனஸ் லிவிடிபெனிஸ் போன்ற உயிரிகளை பாதுகாத்தல்
  • புகையானின் தாக்குதலை அதிகப்படுத்தும் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பைரித்ராய்ட் பூச்சிக்கொல்லிகள், மெத்தில் பாரத்தியான், பென்தியான், குயினால்பிளஸ் போன்றவற்றை உபயோகிப்பதைத் தவிர்த்தல்
  • பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதற்கு முன்பு வயலில் தண்ணீரை வடித்துவிடுதல்
  • கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏதாவது ஒரு மருந்தினை தெளிக்கவும்
  • பாஸ்பமிடான் 40 SL ஒரு ஹெக்டேருக்கு 1000 மி.லி என்ற அளவில் தெளிக்கவும்
  • மோனோகுரோட்டாபாஸ் 36 SL ஒரு ஹெக்டேருக்கு 1250 மி.லி என்ற அளவில் தெளித்தல்
  • கார்போபியூர்ரான் 3 G என்ற மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 17.5 கிலோ என்ற அளவில் தெளித்தல்
  • இமிடாகோப்ரிட் 18.5 என்ற மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 100 மி.லி என்ற அளவில் தெளித்தல்ல
  • தையோமீத்தோக்ஸாம் 20 WDG ஒரு ஹெக்டேருக்கு 100 மி.லி என்ற அளவில் தெளிக்கலாம்
File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies