Best Viewed in Mozilla Firefox, Google Chrome

புகையான் (Brown plant leafhopper)

PrintPrintSend to friendSend to friend

புகையான் (Brown plant leafhopper)

1. பொதுப்பெயர்- பழுப்பு நிற இலை வெட்டுப்பூச்சி

2.அறிவியல் பெயர்- நிலபர்வதா லுயூகன்ஸ்

3. உள்ளூர் பெயர்- புகையான்

புகையான் தாக்குதலின் அறிகுறிகள் (Symptoms of damage of Brown plant leafhopper)

  • செடிகளின் அடிப்பகுதியில் வளர்நிலை பருவப்புழுக்களும், முதிர்ந்த பூச்சிகளும் தண்ணீருக்கு சற்று மேலே செடியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.
  • இப்பூச்சியினால் பாதிக்கப்பட்ட செடி காய்ந்து, கருகியது போல் காணப்படும் அமைப்பு ஹோப்பர் பர்ன் அல்லது புகையான் எரிப்பு எனப்படும்.
  • வளர்ந்த செடிகளில் காயந்த வட்ட நிற திட்டுகள் காணப்படும், எளிதில் சாய்ந்து விடும்.
  • இப்பூச்சி கிராஸி ஸ்டன்ட், ரேக்ட் ஸ்டண்ட் மற்றும் வில்ட்டட் ஸ்டன்ட் போன்ற நோய்களை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளுக்கு நோய் தாங்கியாக செயல்படுகிறது.

புகையானை இனங்கண்டறிதல் (Identification of Brown plant leafhopper)

  • முதிர்ச்சி அடைந்த புழுக்கள் - பழுப்பு நிற உடலுடன் செஸ்ட்நட் பழுப்பு நிறக் கண்களைக் கொண்டவை.  
  • இப்பூச்சகளில் இரண்டு வகைகள் உள்ளன. நீண்ட இறக்கைகள் கொண்டவை, குட்டையான இறக்கைகள் கொண்டவை.
File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
Mr.Chaitanya, DRR
Copy rights | Disclaimer | RKMP Policies