Best Viewed in Mozilla Firefox, Google Chrome

பச்சைத் தத்துப்பூச்சி (Green leafhopper)

PrintPrintSend to friendSend to friend

பச்சைத் தத்துப்பூச்சி (Green leafhopper)

1. பொதுப்பெயர்- பச்சை இலை தத்துப்பூச்சி

2. அறிவியல் பெயர்-நெஃபோடெட்ரிக்ஸ் வைரசென்ஸ்

3. உள்ளூர் பெயர்- பச்சை தத்துப்பூச்சி

பச்சைத் தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Green leafhopper)

  • இலைகளின் நுனியிலிருந்து அடி வரை மஞ்சள் நிறமாக மாறுதல்
  • நெல் டுங்காரோ, மஞ்சள் நெல், தற்காலிக மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற நோய்களுக்கு நோய்தாங்கிகளாக செயல்படுதல்.

பச்சை இலை தத்துப்பூச்சியினை இனங்கண்டறிதல் (Identification of Green leafhopper)

முதிர்ந்த தத்துப்பூச்சி பச்சை நிறத்துடன் அவற்றின் இறகுகளில் கருப்பு நிறத் திட்டுகள் மற்றும் புள்ளிகள் காணப்படும்

பச்சைத் தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்துதல் (Management of Green leafhopper)

  • பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற நெல் வகைகளான ஐ.ஆர் 50, சி ஆர் 1009 மற்றும் சி0 46 போன்றவற்றை சாகுபடி செய்தல்.
  • 20 சென்ட் நாற்றங்காலுக்கு 12.5 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் அடிஉரம் இடுதல்.  
  • வரப்புகளிலுள்ள தாவரங்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தல்
  • பூச்சிகளைப் பிடிக்க விளக்குப்பொறிகளை உபயோகித்தல்
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை நாற்றுகளை நடவு செய்த 15 மற்றும் 30ம் நாள் தெளித்தல்
  • பாஸ்போமிடான் – 40 SL மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 1000 மிலி என்ற அளவில் தெளித்தல்
  • புரோபெனோபாஸ் 50 EC ஒரு ஹெக்டேருக்கு 1000 மிலி என்ற அளவில் தெளித்தல்
File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
Mr.Chaitanya, DRR
Copy rights | Disclaimer | RKMP Policies