Best Viewed in Mozilla Firefox, Google Chrome

பச்சை கொம்புப்புழு (Rice horned caterpillar)

PrintPrintSend to friendSend to friend

பச்சை கொம்புப்புழு (Rice horned caterpillar)

1. பொதுவான பெயர்- நெல் கொம்புப்புழு

2. அறிவியல் பெயர்- மெலானிட்டிஸ் ஐஸ்மெனே

3. உள்ளூர் பெயர்-பச்சை கொம்புப்புழு

பச்சைக்கொம்புப்புழு தாக்குதலின் அறிகுறிகள் (Damage of Rice horned caterpillar)

  • நெற்பயிரின் இலைகளை இளம்நிலை வளர் புழுக்கள் தின்று விடும்
  • இலையின் விளிம்பிலிருந்து அல்லது அதன் நுனியிலிருந்து முறையற்ற இலை உதிர்வு காணப்படுதல்.

பச்சைக்கொம்பு புழுவினை இனங்கண்டறிதல் (Identification of Rice horned caterpillar)

  • முட்டை - வெள்ளை நிற முட்டைகள் தனித்தனியாக இலைகளின் மீது காணப்படும்
  • இளம்நிலை வளரும் புழு- இரண்டு சிவப்பு நிற கொம்புகளுடன் சிறிது தட்டையாக காணப்படும். மேலும் அதன் மலவாயின் கீழே இரண்டு மஞ்சள் நிற அமைப்புகள் காணப்படுதல்
  • வளர்நிலை புழு- இலையிலிருந்து கிரைசாலிஸ் எனப்படும் அமைப்பு நீண்டு காணப்படும்
  • முதிர்ந்த புழுக்கள்- அடர்ந்த பழுப்பு நிறத்தில் முன்பகுதியில் கருமை கலந்த மஞ்சள் நிறமுடைய ஒரு பெரிய புள்ளி இரண்டு இறக்கைகளிலும் காணப்படும்.

பச்சைக்கொம்பு புழுவினைக் கட்டுப்படுத்துதல் (Management of Rice horned caterpillar)

  • என்டோசல்பான் 35 EC மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 WSC 500 மி.லி ஒரு ஹெக்டேர் என்ற அளவில் தெளித்தல்
File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies