Best Viewed in Mozilla Firefox, Google Chrome

புவியியல், தட்பவெப்பம் (Geography, Climate)

PrintPrintSend to friendSend to friend

புவியியல், தட்பவெப்பம் (Geography, Climate)

வடதுருவத்தின் வெப்பமண்டலத்தில், 80 முதல் 13’ அட்சரேகை மற்றும் 780 முதல் 800 கிழக்கு தீர்க்கரேகை ஆகியவற்றுக்கிடையே தமிழ்நாடு அமைந்துள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் இந்து மகாசமுத்திரம், மேற்கில் கேரளா, கர்னாடகா மற்றும் வடக்கில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்னாடகா மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது . குறிஞ்சி மலைப்பிரதேசங்கள், முல்லை வனப்பகுதிகள், வளமான மருதநிலங்கள், கடலோர நெய்தல் பகுதி மற்றும் வறண்ட பாலை ஆகிய ஐந்து முக்கிய நிலப்பகுதிகளை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தின் நீலகிரியில், மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் கூடுகின்றன. தமிழகத்தின் புவியியல் பரப்பில் மிகவும் வளமான தாவர மற்றும் விலங்கின வகைகள் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமான குறிஞ்சி மலர், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடியது. காவிரி நதி தமிழகத்தின் முக்கியமான மற்றும் நீளமான ஆறு. பாலாறு, பெண்ணாறு, வைகை மற்றும் தாமிரபரணி ஆகியவை பிற முக்கிய ஆறுகளாகும். 912 கிலோமீட்டர் நீள கடற்கரை பகுதியை தமிழகம் கொண்டுள்ளது. அதில் வடக்கு பாதி பகுதி கோரமண்டல் அல்லது ‘சோழமண்டலக் கரை’ எனவும் தெற்குப்பகுதி ‘முத்துக்கடல் பகுதி’ எனவும் வழங்கப்படுகிறது. பொதுவாக வெப்பமண்டல தட்பவெப்பநிலை கொண்டுள்ள தமிழகத்தில், தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரண்டு பருவமழை காலங்களில் ஆண்டுக்கு 925 மில்லிமீட்டர் மொத்த மழை பொழிகிறது.

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies