Best Viewed in Mozilla Firefox, Google Chrome

தண்ணீர் தேங்கிய நிலங்களில் ஈர விதையாக விதைத்து சாகுபடி செய்யப்படும் நெல்லை அறுவடை செய்தல் (Harvesting of Wet Seeded Puddled Lowland Rice )

PrintPrintSend to friendSend to friend

தண்ணீர் தேங்கிய நிலங்களில் ஈர விதையாக விதைத்து சாகுபடி செய்யப்படும் நெல்லை அறுவடை செய்தல் (Harvesting of Wet Seeded Puddled Lowland Rice )

1. நெற்பயிரின் சராசரி பயிரிடும் காலத்தினைக் கணக்க்கிட்டு, அறுவடை செய்வதற்கு 7-10 நாட்களுக்கு முன்பாக வயலிலிருந்து தண்ணீரை வடித்து விடுவதால் பயிர் முதிர்ச்சி அடைவது ஊக்குவிக்கப்படுவதுடன், அறுவடைக்கு எளிதாகவும் இருக்கும்80 சதவிகித நெற் கதிர்கள், மஞ்சள் நிறமாக மாறியிருந்தால் பயிர் அறுவடைக்குத் தயாராக இருக்கிறது என்று அர்த்தம். இந்த நிலையிலும் சில நெல் ரகங்களின் இலைகள் பச்சை நிறமாக இருக்கும்

2. பயிர் முதிர்ச்சியடைந்ததை உறுதி செய்ய, நெற்கதிரிலிருந்து சில தானியங்களை உருவி, கையால் கசக்கி உமியினை நீக்கிப் பார்க்கவேண்டும். அரிசி கடினமாக இருந்தால் பயிர் அறுவடைக்குத் தயாராக இருக்கிறது என்று அர்த்தம்

3. கதிரிலுள்ள பெரும்பான்மையான நெல்லில் உள்ள அரிசி கடினமாக இருந்தால் பயிர் அறுவடைக்கு தயாராக இருக்கிறது என்பதால் நெற்பயிரினை அறுவடை செய்து, கதிரினை அடித்து நெல்லை பிரிக்கவேண்டும்

4. தானியங்களை அதன் ஈரப்பதம் 12 சதவிகிதம் என்ற அளவு இருக்குமாறு உலர்த்திட வேண்டும். நெல்லில் உள்ள அரசியின் அளவு, நெல்லின் ஈரப்பதம் 14% இருந்தால் மட்டுமே மதிப்பிட முடியும்

5. பயிரின் அறுவடைக்கு முன்பாக 20% சோடியம் குளோரைடு கரைசலை பயிருக்குத் தெளிப்பதால் பயிர் முதிர்ச்சி அடைவது ஊக்குவிக்கப்பட்டு, பருவ மழையிலிருந்தும் தப்பிக்க வழிவகை செய்யும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies