Best Viewed in Mozilla Firefox, Google Chrome

தண்ணீர் தேங்கிய நிலங்களில் ஈர விதையாக நேரடியாக விதைப்பு செய்யப்படும் நெல்லுக்கான உர மேலாண்மை (Manures and fertilizer application for Wet Seeded Puddled Lowland Rice)

PrintPrintSend to friendSend to friend

தண்ணீர் தேங்கிய நிலங்களில் ஈர விதையாக நேரடியாக விதைப்பு செய்யப்படும் நெல்லுக்கான உர மேலாண்மை (Manures and fertilizer application for Wet Seeded Puddled Lowland Rice)

  • நாற்றங்காலில் நாற்றுகளை வளர்த்து பயிர் செய்யப்படும் முறை போலவே நேரடியாக ஈர விதையாக விதைக்கப்படும் நெல்லுக்கும் பின்பற்றவேண்டும்
  • 25% நைட்ரஜன் மற்றும் பொட்டாசிய உரங்களை விதைப்பு செய்து 21 நாள் கழித்தும், கதிர் விடும் தருணத்திலும், கதிர் சாயும் தருணத்திலும் வயலில் இடவேண்டும்
  • இலை நிற அளவு கோலைப் பயன்படுத்தி, நேரடியாக விதைப்பு செய்த நெற்பயிரின் இலையின் நிற அளவு 3 ஆக இருக்கும்போதும், வரிசையாக விதைப்பு செய்த நெற் பயிரின் இலை நிற அளவு 4 ஆக இருக்கும் போது பயிருக்குத் தேவையான நைட்ரஜன் சத்தினை அளிக்கவேண்டும்
  • கடைசியாக உழவு செய்யும் போதோ அல்லது பசுந்தாள் உரத்தையோ/மக்கிய தொழு உரத்தினை வயலில் இடும்போதோ, பாஸ்பரஸ் உரத்தினை அடி உரமா இடவேண்டும்
  • நாற்றங்கால் மூலம் நாற்று உற்பத்தி செய்யப்பட்டு பயிரிடப்படும் நெல் ரகங்களைப் போலவே, போதுமான ஈரப்பதம் இருக்கும்போது நேரடியாக விதைப்பு செய்யப்படும் நெல்லுக்கும் உயிர் உரங்களை இடவேண்டும்
  • நுண்ணுயிர் உரங்கள், பயிர் மீது தெளிக்கும் கரைசல்கள், உயிர் உரங்கள் போன்றவற்றை நாற்றங்கால் மூலம் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யும் நெற்பயிர் பயிரிடும் முறை போன்றே இம்முறைக்கும் தேவைப்படும்
File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
Dr.RM Kumar, DRR
Copy rights | Disclaimer | RKMP Policies