Best Viewed in Mozilla Firefox, Google Chrome

தண்ணீர் தேங்கும் நிலங்களில் ஈர நெல்லை நேரடியாக விதைத்து சாகுபடி செய்யப்படும் நெல் (Cultivation of Wet Seeded Puddled Lowland Rice)

PrintPrintSend to friendSend to friend

தண்ணீர் தேங்கும் நிலங்களில் ஈர நெல்லை நேரடியாக விதைத்து சாகுபடி செய்யப்படும் நெல் (Cultivation of Wet Seeded Puddled Lowland Rice)

இடம்

எங்கெல்லாம் நாற்றங்கால் மூலம் நெல் நாற்றுகளை உற்பத்தி செய்ய சாத்தியக்கூறுகள் இல்லலையோ அங்கு ஈர விதை நெல்லை நேரடியாக விதைப்பு செய்யலாம்

நிலத்தினைத் தயார் செய்தல்

1. மே –ஜூலை மாதங்களில் மழை பொழியும் பொழுது தொடர்ந்து உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு, களைகள் அழிக்கப்படுவதுடன், மண்ணில் கட்டிகள் உடைக்கப்படுகின்றன

2. நாற்றங்காலிலிருந்து நாற்றுகளை பிடுங்கி நடும் முறையில் செய்வது போலவே தண்ணீருடன் வயலை உழவு செய்யவேண்டும். நிலத்தினை சமமாக இருக்குமாறு உழவு செய்யவது அவசியம்

3. நாற்றுகள் முளை விடும் போது தண்ணீர் திட்டுக்களாக வயலில் தேங்கியிருந்தாலும், சீக்கிரமாக நாற்றுகள் முளை விட்டாலும் அவை மண்ணில் வேரூன்றுவது சிரமம்

4. நிலம் சமமாக இருப்பின் களை மற்றும் நீர்ப்பாசன மேலாண்மையினை நன்கு பின்பற்ற முடியும்

5. மூன்று மீட்டர் இடைவெளியில், 15 செமீ அகலமுடைய வாய்க்கால்களை அமைப்பதால் நெற்பயிரின் தொடக்க வளர்ச்சசி காலத்தில் வயலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான தண்ணீர் வடிந்து விடுவதற்கு வழிவகுக்கும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
http://agritech.tnau.ac.in/agriculture/agri_cropproduction_cereal_rice_wetseededpudled.html
Copy rights | Disclaimer | RKMP Policies