Best Viewed in Mozilla Firefox, Google Chrome

உரங்கள் அளிக்கப்படாத வயல்களை பராமரிக்கும் வழிமுறைகள் (Guidelines for maintaining omission plots)

PrintPrintSend to friendSend to friend

உரங்கள் அளிக்கப்படாத வயல்களை பராமரிக்கும் வழிமுறைகள் (Guidelines for maintaining omission plots)

பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்கள் தெளிக்கப்படாமல் நெல் பயிர் வளர்க்கப்படும் முக்கியநோக்கம் இடத்திற்கேற்றவாறு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களின் அளவினை கண்டறிந்து அவற்றை பரிந்துரைப்பதாகும். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட அளவு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்கள் தெளிக்கப்பட்ட வயல்களில் எடுக்கப்படும் அறுவடைக்கும், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் தெளிக்கப்படாத நெல் வயல்களிலிருந்து எடுக்கப்படும் அறுவடைக்கும் உள்ள வித்தியாசத்தினைக் கொண்டு நெற்பயிருக்குத் தேவைப்படும் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸின் தேவையினை அறிவதுடன், மண்ணிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தின் அளவினையும் கண்டறியலாம். இதன் மூலம் பயிருக்கு அளிக்கப்படவேண்டிய பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உரங்களின் அளவினை கணக் ட்டுக் கொள்ளலாம்.

  • பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்கள் தெளிக்கப்படாத வயல்களை மழை மற்றும் வறட்சி காலத்திலும் த ர் செய்யவும்
  • 5 மீட்டர் அகலம் மற்றும் 5 மீட்டர் நீளமுடைய நான்கு சதுர வயல்களை ஒரு விவசாயியின் பண்ணையில் நிறுவவேண்டும். இந்த சோதனை வயல்களை பண்ணையின் ஒரு மூலையில் வைக்கக்கூடாது. ஒவ்வொரு சோதனை வயலுக்கும் இடையில் 3 மீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்வதன் மூலம் சோதனை வயல்களுக்கு இடையில் தெளிக்கப்பட்ட உரங்களிலுள்ள சத்துகள் ஊடுருவாது. வுவது தடுக்கப்படுகிறது .
  • சோதனை வயலுக்கு இடையில் வரப்புகளை நன்கு உயரமாக அமைக்கவேண்டும், இவ்வாறு வரப்புகளை உயரமாக அமைப்பதால் ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு தண்ணீர் போகாமல் தடுக்கமுடியும். பயிரின் அறுவடை காலம் வரை இவ்வாறு வரப்புகளை உயரமாகப் பராமரிப்பதால் வயல்களுக்கு இடையில் உரங்கள் மற்றும் தண்ணீர் போகாமல் தடுக்கலாம். வயலினைச் சுற்றி பாதுகாப்பு வரப்புகளையும் அமைக்கவேண்டும். வயலுக்குப் பாய்ச்சப்படும் தண்ணீர் மற்றும்ம் வெள்ள நீர் வயல்களில் புகாமல் இருக்கவும் வயல்களிலிருந்து தண்ணீர் வெளியே வராமல் இருக்கவும்ம் இந்த பாதுகாப்பு வரப்புகள் உதவும்
  • பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது உட்பட எல்லா விதமான பயிர் மேலாண்மை செயல்களும் அனைத்து வயல்களுக்கும் ஒரே மாதிரியாக மேற்கொள்ளப்படவேண்டும்
  • விவசாயிகளின் ஒத்துழைப்புடன் உரங்களை மிகவும் கவனமாக பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் இடவேண்டும்.
File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies