Best Viewed in Mozilla Firefox, Google Chrome

உபயோகிக்கும் வழிமுறைகள் (User guidelines)

PrintPrintSend to friendSend to friend

உபயோகிக்கும் வழிமுறைகள் (User guidelines)

1. நெல்நாற்றின் இலையினை நாற்றங்காலிருந்து வயலில் எடுத்து நட்ட 14ம் நாள் முதலும், விதைநெல் நடவு செய்த 21ம் நாள் முதலும் இலை நிற அளவுகோலை பயன்படுத்தி நெற்பயிருக்குத் தேவையான சத்துகளின் அளவினை கண்டறியலாம்.

2. பத்து நாற்றங்கால் நெற்பயிரின் கொத்துகளிலுள்ள நன்கு விரிந்த இளம் இலை நுனியில் உள்ள நிறத்தினை இலை நிற அளவுகோலினைப் பயன்படுத்தி கீழ்க்கண்டவாறு அளவிடலாம்

  • தேர்வு செய்யப்பட்ட நாற்றங்கால் கொத்திலுள்ள நெற்பயிரின் நன்கு விரிந்த மேற்பகுதியிலுள்ள இளம் இலையின் நுனிப்பகுதியினை தேர்வு செய்யவும்
  • இலைநிற அளவுகோலினை தேர்வு செய்யப்பட்ட இலையின் நடுப்பகுதிக்கு அருகில் வைத்து நிறத்தினை ஒப்பிடவும்
  • இலையினை நெற்பயிரிலிருந்து பிரிக்கக்கூடாது
  • இலையினை உங்கள் உடல் நிழலில் வைத்து சூரிய ஒளி அதன் மீது படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வதன் மூலம் சரியான அளவினை எடுக்கலாம்
  • இலையின் நிறத்தினை இலை நிற அளவுகோலில் உள்ள நிறங்களுடன் ஒப்பிட்டு அளவுகோலில் உள்ள இலை நிறத்தினை ஒத்துள்ள நிறத்தின் எண்ணைக் குறித்துக்கொள்ளவும். இவ்வாறு குறிக்கப்பட்ட எண்ணானது இலையின் நிற அளவாகும்
  • நெற்பயிரின் இலையின் நிறம், இலை நிற அளவுகோலிலுள்ள இரண்டு நிறங்களுக்கு இடையில் இருந்தால், அளவுகோலிலுள்ள இரண்டு நிற அளவுகளின் சராசரியினை இலை நிற அளவாக எடுத்துக்கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக இலையின் நிறம் இரண்டு மற்றும் மூன்று எண்களுக்கு இடையில் இருந்தால் இலையின் நிற அளவு 2.5 ஆகும்
  • இதேபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நெற்பயிர் நாற்றுகளின் இலைகளின் அளவினை எடுக்கவேண்டும்
  • இவ்வாறு நெற்பயிர் பூ விடும் தருணம் வரை குறைந்த நாட்களில் அறுவடை செய்யும் நெற்பயிர்களுக்கு 7 நாட்களுக்கு ஒருமுறையும், நீண்ட நாட்கள் கழித்து மகசூல் தரும் நெற்பயிருக்கு 10 நாட்களுக்கு ஒருமுறையும் அளவினை கணக்கிடவேண்டும். கடைசியாக எடுக்கப்பட்ட அளவு நெற்பயிர் பூ விடும் தருணத்தில் எடுக்கவேண்டும். இவ்வாறு எடுக்கப்பட்ட 10 இலை நிற அளவீடுகளில் 5 அளவீடுகளுக்கு மேல் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைவாக இருப்பின் (ஒட்டு ரக நெற்பயிர் மற்றும் வெள்ளைப்பொன்னி நெல்வகைகளைத் தவிர மற்ற நெல் வகைகளுக்கு இந்த குறியீடு அளவு -4, பொன்னி மற்றும் நேரடியாக விதைப்பு செய்யப்பட்ட நெல் வகைகளுக்கு குறியீட்டு எண்-3) ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 3.5 கிலோ நைட்ரஜன் உரத்தினை குறுவைப் பருவத்திலும், தாளடிப் பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு 30 கிலோ நைட்ரஜன் உரத்தையும் இடவேண்டும்.
File Courtesy: 
TNRRI - Aduthurai
Copy rights | Disclaimer | RKMP Policies