Best Viewed in Mozilla Firefox, Google Chrome

உலர் விதை மேட்டுநில நெல் அறுவடை

1. ஈரப்பதம் அளவு மற்றும் பயிருக்கு கிடைத்த சத்துக்களின் அளவினைப் பொறுத்தே மகசூல் இருக்கும்

2. பயிரின் சாகுபடி கால அளவினைப் பொறுத்து, வயலிலிருந்து தண்ணீரை அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன்பாகவே வடித்த விடுவதால் பயிர் முதிர்ச்சி அடைவது ஊக்குவிக்கப்பட்டு, அறுவடைக்கும் ஏற்றதாக இருக்கும்

3. 80 சதவிகித நெற் கதிர்கள், மஞ்சள் நிறமாக மாறியிருந்தால் பயிர் அறுவடைக்குத் தயாராக இருக்கிறது என்று அர்த்தம். இந்த நிலையிலும் சில நெல் ரகங்களின் இலைகள் பச்சை நிறமாக இருக்கும்

4. பயிர் முதிர்ச்சியடைந்ததை உறுதி செய்ய, நெற்கதிரிலிருந்து சில தானியங்களை உருவி, கையால் கசக்கி உமியினை நீக்கிப் பார்க்கவேண்டும். அரிசி கடினமாக இருந்தால் பயிர் அறுவடைக்குத் தயாராக இருக்கிறது என்று அர்த்தம்

5. கதிரிலுள்ள பெரும்பான்மையான நெ

மேட்டுப்பாங்கான நிலத்தில் பயிர் செய்யப்படும் நெல்லுக்கான தண்ணீர்ப் பாசன மேலாண்மை (Water management in Dry Seeded Upland Rice)

  • தண்ணீர்ப் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் நெல்லைப் போலவே, வாய்க்கால் பாசனம் பெறும் பொழுதும் நீர் பாய்ச்சவேண்டும்
  • தண்ணீர் அதிகப்படியாக கிடைப்பதற்கு ஏற்றவாறு, பயிர் ரகத்தினை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யவேண்டும்

மேட்டுப்பாங்கான நிலங்களில் சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான தனிப்பட்ட சாகுபடி முறைகள் (Other special cultural practices followed Dry Seeded Upland Rice)

சைக்கோசீல் 1000 பிபிஎம் (ஒரு மிலி/ஒரு லிட்டர் தண்ணீர்) என்ற அளவில் தண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் பயிருக்கு தெளிப்பதால் வறட்சியினால் பயிருக்கு ஏற்படும் அயற்சியினைத் தடுக்கலாம்

  • பயிரின் மீது கயோலின் 3 % அல்லது பொட்டாசியம் குளோரைடு 1 % கலவையினை தெளிப்பதால் ஈரப்பதத்தினால் பயிரின் வெவ்வேறு வளர்பருவங்களில் ஏற்படும் அயற்சியினைத் தடுக்கலாம்
  • தண்ணீர் வாய்க்காலில் திறந்து விடப்படுவது தாமதமானால், வயலில் தேங்கி நிற்கும் தண்ணீர் வற்றிய பிறகு வயலில் தண்ணீர் பாய்ச்சி 5 செமீ உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் திறந்து விடுவது தாமதமானால் ஏடிடி 38 ரக நெல் ரகத்தினை நடவ

மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிர் செய்யப்படும் நெல் பயிருக்கான களை மேலாண்மை (Weed management in Dry Seeded Upland Rice)

  • விதை முளை விட்டு 15-21ம் நாள் முதல் களை எடுக்கவேண்டும்
  • முதல் களை எடுத்து 30-45ம் நாள் இரண்டாம் முறை களை எடுக்கவேண்டும்
  • பென்டிமித்ததாலின் ஒரு கிலோ/ஒரு ஹெக்டேருக்கு என்ற விகிதத்தில் விதை விதைத்து 5ம் நாள் அல்லலது பிரீடிலாகுளோர்+சேஃப்னர் 0.45கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் மழை பெய்த நாளன்றும் வயலில் தெளித்து பிறகு விதை விதைத்து 30-35ம் நாள் ஒரு முறை கையால் களை எடுக்கவேண்டும்

மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிர் செய்யப்படும் நெற் பயிருக்கு உரமிடுதல் (Manures and fertilizer application in Dry Seeded Upland Rice)

1. பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை பயிர் வளர்ச்சிக்கேற்றவாறு பிரித்து வயலில் இடவேண்டும்

2. இலை நிற அளவு கோலைப் பயன்படுத்தி பயிருக்குத் தேவையான நைட்ரஜன் சத்தின் அளவை அறிந்து வயலில் இடலாம்

3. பண்ணைத் தொழு உரம் அல்லது மக்கிய உரத்தினை ஒரு ஹெக்டேருக்கு 12.5 டன் என்ற அளவிலோ அல்லது 50 கிலோ பாஸ்பரஸ் பென்டாக்சைடு ஊற்றமேற்றிய 750 கிலோ பண்ணைத் தொழு உரத்தினை அடிஉரமாக நாகப்பபட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் களிமண் இருக்கும் பகுதிகளில் சாகுபடி செய்யும் போது இடவேண்டும்

4. நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் உரங்களை மூன்று தவணைகளாக விதை விதைத்து 20-25, 40-45, 60-65 ம் நாள் குறுகிய கால நெல் ரகங்களுக்கும், மத்திய கால நெல் ரகங்களுக்கு 4 தவணைகளாக விதை முளைத்

மேட்டுப்பாங்கான நிலங்களில் நெல்லை விதைத்த பிறகு செய்யப்படவேண்டியவை (After cultivation in Dry Seeded Upland Rice)

  • அசோஸ்பைரில்லம் ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ/10 பாக்கெட்டுகள் அல்லது பாஸ்போபாக்டீரியா ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ அல்லது 20 பாக்கெட்டுகள் அல்லது அசோஸ்பாஸ் ஒரு ஹெக்டேருக்க்கு 4000 கிலோ போன்றவற்றை பண்ணைத்தொழு உரத்துடன் கலந்து, மழை பெய்தற்கு பிறகு வயலில் சமமாக விதைக்கவேண்டும்
  • உடனடியாக பெய்த மழையினை பயன்படுத்திக்கொண்டு அடர்த்தியாக உள்ள நாற்றுகளைப் பிடுங்கி நாற்றுகள் முளைக்காத வெற்றிடத்தில் விதை விதைத்து 14-21ம் நாள் நாள் நடவேண்டும்

மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிர் செய்யப்படும் நெல்லை நேரடி விதைப்பு செய்தல் (Sowing of Dry Seeded Upland Rice)

  • பரிந்துரைக்கப்பட்ட எந்த ஒரு நெல் ரகத்திற்கும் தேவைப்படும் விதையளவு ஒரு ஹெக்டேருக்கு 75 கிலோ
  • விதைகளைக் கடினப்படுத்த ஒரு சதவிகித பொட்டாசியம் குளோரைடு கரைசலில் (ஒரு பங்கு விதை:ஒரு பங்கு பொட்டாசியம் குளோரைடு) விதைகளை 16 மணி நேரம் ஊறவைத்துப் பிறகு நிழலில் உலர்த்தவேண்டும். நிழலில் விதைகளை உலர்த்துவதால் நிலையான ஈரத்தன்மை விதையில் இருக்கும். மேலும் பயிரின் தொடக்ககாலத்தில் ஈரத்தன்மையினால் ஏற்படும் அயற்சியினை தாங்கிக்கொள்வதற்கும் இந்த விதை கடினப்படுத்தும் முறை உதவி செய்யும்
  • விதைகளை விதைப்பு செய்யும் நாள், கடினப்படுத்தப்பட்ட விதைகளை சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து, பன்பு அசோஸ்பாஸ் 2000 கிராம் அல்லது

மேட்டுப்பாங்கான நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்வதற்கேற்ற நெல் ரகங்கள் (Varieties recommended for Dry Seeded Upland Rice)

  • நடுத்தர கால நெல் ரகங்கள், ஆகஸ்டு மாதம் விதைப்பு செய்யப்பட்டால், குறுகிய கால நெல் ரகங்கள் செப்டம்பர் மாதம் விதைப்பு செய்யப்பட்டால் – பருவ நிலைக்கேற்றவாறு
  • வாய்க்கால் தண்ணீர் பாசனத்திற்கு பெறுவது உறுதியாக இருந்தால், அதிக மகசூல் தரும் மேம்படுத்தப்பட்ட குறுகிய கால, நடுத்தர கால நெல் ரகங்களை சூழ்நிலைக்கேற்றவாறு சாகுபடி செய்யலாம் (விதைப்பு செய்யப்படும் மாதம், வாய்க்காலுக்கு அருகாமை, வடகிழக்கு பருவ மழை காலத்தின் போது தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு )

மேட்டுப்பாங்கான நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்யப்படும் நெல் பயிருக்காக நிலத்தினைத் தயார் செய்தல் ( Land preparation for dry seeded upland rice)

பருவம்

சம்பா/தாளாடி பருவங்களை முக்கியம் வாய்ந்தவை

  • நிலத்தினை வர உழவு செய்யவேண்டும். வர உழவு செய்வதால் மண், நன்கு தூளாக இருப்பதுடன், பெய்யும் மழை நீரை உறிஞ்சி மண்ணின் ஈரப்பதத்தினைத் தக்க வைத்துக்கொள்ளும்
  • மண் கடினமாகவும், கட்டியாகவும் இருக்கும் போது ஜிப்சம் உரத்ததினை ஒரு ஹெக்டேருக்கு ஒரு டன் என்ற அளவில் வயலில் இடவேண்டும்
  • களை மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன மேலாண்மைக்காக நிலம் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்
  • நெல் வயலைச் சுற்றியும் குறைந்த ஆழத்தில் 15 செமீ அகலத்தில் மூன்று மீட்டர் இடைவெளி விட்டு வாய்க்கால்கள் அமைக்கவேண்டும். இதனால் வயலில் அதிகப்படியாக தேங்கியிருக்கும் தண்ணீர் வடிவதற

மேட்டுப்பாங்கான நிலங்களில் நேரடியாக விதைப்பு செய்யப்படும் நெல் (DRY SEEDED UPLAND RICE)

1. தர்மபுரி மாவட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே சிறு பகுதிகளில் இந்த முறை நெல் சாகுபடி செய்யப்படுகிறது

2. தமிழ்நாட்டில் மானாவாரியாக நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளை விட இந்தப் பகுதியில் மழையின் அளவு நன்றாக இருக்கிறது. ஆனால் மழை நீரைத் தேக்கி வைக்க குட்டைகள் இல்லை.

3. ஈரப்பதம் இருந்தாலும் பயிர் வளர்ச்சி அதற்கு கிடைக்கும் சத்துக்களின் அளவைப் பொறுத்து உள்ளது

Copy rights | Disclaimer | RKMP Policies