Best Viewed in Mozilla Firefox, Google Chrome

வேளாண்மை மண்டலங்கள் (AEZ), மண்வகைகள் (Soils)

தமிழ்நாடு ஆறு வேளாண் காலநிலை மண்டலங்களாக (Agro Ecological Zones) பிரிக்கப்பட்டுள்ளது. அவை வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு, காவிரி டெல்டா, தெற்கு, அதிக மழை பெறும் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகள் ஆகியவை. மேலும் சரளை (laterite), மணல் கலந்த செம்மண் (red sandy), ஆற்று வண்டல் (deltaic alluvium), கடலோர வண்டல் (coastal alluvium) மற்றும் செண்மண் களி (red loam) ஆகிய முக்கிய மண் வகைகள் தமிழகத்தில் காணப்படுகின்றன.

புவியியல், தட்பவெப்பம் (Geography, Climate)

வடதுருவத்தின் வெப்பமண்டலத்தில், 80 முதல் 13’ அட்சரேகை மற்றும் 780 முதல் 800 கிழக்கு தீர்க்கரேகை ஆகியவற்றுக்கிடையே தமிழ்நாடு அமைந்துள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா, தெற்கில் இந்து மகாசமுத்திரம், மேற்கில் கேரளா, கர்னாடகா மற்றும் வடக்கில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்னாடகா மாநிலங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது . குறிஞ்சி மலைப்பிரதேசங்கள், முல்லை வனப்பகுதிகள், வளமான மருதநிலங்கள், கடலோர நெய்தல் பகுதி மற்றும் வறண்ட பாலை ஆகிய ஐந்து முக்கிய நிலப்பகுதிகளை தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தின் நீலகிரியில், மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் கூடுகின்றன. தமிழகத்தின் புவியியல் பரப்பில் மிகவும் வளமான தாவர மற்றும் விலங்கின வகைகள் காணக் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமான குறிஞ்சி மலர், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை

19
Sep

தமிழ்நாடு

தமிழ்நாடு

1. அமைக்கப்பட்ட நாள்: 15 ஆகஸ்ட், 1947. தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் :14 ஜனவ்ரி, 1969

2. மாவட்டங்களின் எண்ணிக்கை: 31

3. பரப்பளவு: 1,30,058 சதுர கிலோமீட்டர்

4. கிராமங்கள்: 15400

5. தலைநகரம்: சென்னை

6. நகரங்கள்:832

7. மக்கள்தொகை: 62,405,679

8. தற்போதைய விலையில் தனிநபர் வருமானம் (2005-06): ரூ 29,958

தண்ணீர் தேங்கிய நிலங்களில் ஈர விதையாக விதைத்து சாகுபடி செய்யப்படும் நெல்லை அறுவடை செய்தல் (Harvesting of Wet Seeded Puddled Lowland Rice )

1. நெற்பயிரின் சராசரி பயிரிடும் காலத்தினைக் கணக்க்கிட்டு, அறுவடை செய்வதற்கு 7-10 நாட்களுக்கு முன்பாக வயலிலிருந்து தண்ணீரை வடித்து விடுவதால் பயிர் முதிர்ச்சி அடைவது ஊக்குவிக்கப்படுவதுடன், அறுவடைக்கு எளிதாகவும் இருக்கும்80 சதவிகித நெற் கதிர்கள், மஞ்சள் நிறமாக மாறியிருந்தால் பயிர் அறுவடைக்குத் தயாராக இருக்கிறது என்று அர்த்தம். இந்த நிலையிலும் சில நெல் ரகங்களின் இலைகள் பச்சை நிறமாக இருக்கும்

2. பயிர் முதிர்ச்சியடைந்ததை உறுதி செய்ய, நெற்கதிரிலிருந்து சில தானியங்களை உருவி, கையால் கசக்கி உமியினை நீக்கிப் பார்க்கவேண்டும். அரிசி கடினமாக இருந்தால் பயிர் அறுவடைக்குத் தயாராக இருக்கிறது என்று அர்த்தம்

3. கதிரிலுள்ள பெரும்ப

தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் சாகுபடி செய்யப்படும் நெல்லுக்கான களை, தண்ணீர், பூச்சிகள் மேலாண்மை (Weed ,Water and Pest management for Wet Seeded Puddled Lowland Rice)

களை மேலாண்மை

  • ஈரமாக விதைப்பு செய்யப்படும் நெல்லுக்கு, விதை விதைத்து 8 நாட்களுக்குப் பின்பு பிரிடில்லாகுளோர் என்ற மருந்தினை ஒரு ஹெக்டேருக்ககு 0.75 கிலோ என்ற அளவிலோ அல்லது பிரிடிலா குளோர்+சேப்னர் கலவையினை ஒரு ஹெக்டேருக்கு 0.45கிலோ என்ற அளவில் விதை விதைத்தது 3-4 நாட்களுக்குப் பின் தெளிக்ககவேண்டும். பிறகு களைகளை கையால் விதை விதைத்து நாற்பதாம் நாள் பிடுங்க வேண்டும்

தண்ணீர்ப் பாசன மேலாண்மை

  • முதல் வாரத்தில் மண்ணை மெல்லிய தண்ணீர் படலத்தினைக் கொண்டு மண் நனையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
  • பயிரின் வயதுக்கேற்றவாறு தண்ணீர் தேங்கும் அளவு 2.5 செமீ உயரத்திற்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்

தண்ணீர் தேங்கிய நிலங்களில் ஈர விதையாக நேரடியாக விதைப்பு செய்யப்படும் நெல்லுக்கான உர மேலாண்மை (Manures and fertilizer application for Wet Seeded Puddled Lowland Rice)

  • நாற்றங்காலில் நாற்றுகளை வளர்த்து பயிர் செய்யப்படும் முறை போலவே நேரடியாக ஈர விதையாக விதைக்கப்படும் நெல்லுக்கும் பின்பற்றவேண்டும்
  • 25% நைட்ரஜன் மற்றும் பொட்டாசிய உரங்களை விதைப்பு செய்து 21 நாள் கழித்தும், கதிர் விடும் தருணத்திலும், கதிர் சாயும் தருணத்திலும் வயலில் இடவேண்டும்
  • இலை நிற அளவு கோலைப் பயன்படுத்தி, நேரடியாக விதைப்பு செய்த நெற்பயிரின் இலையின் நிற அளவு 3 ஆக இருக்கும்போதும், வரிசையாக விதைப்பு செய்த நெற் பயிரின் இலை நிற அளவு 4 ஆக இருக்கும் போது பயிருக்குத் தேவையான நைட்ரஜன் சத்தினை அளிக்கவேண்டும்
  • கடைசியாக உழவு செய்யும் போதோ அல்லது பசுந்தாள் உரத்தையோ/மக்கிய தொழு உரத்தினை வயலில் இடும்போதோ, பாஸ்ப

தண்ணீர் தேங்கிய நிலங்களில் நெல்லை நேரடியாக விதைப்பு செய்த பின்பு பின்பற்றப்படவேண்டியவை (After cultivation in Wet Seeded Puddled Lowland Rice)

1. விதை விதைத்த 14-21ம் நாளுக்குப் பிறகு அப்போது பெய்த மழையினைப் பயன்படுத்தி நாற்றுகள் அடர்த்தியாக உள்ள பகுதிகளிலிருந்து நாற்றுகளை பிடுங்கி நாற்றுகள் முளைக்காத இடங்களில்

2. பசுந்தாள் உரத்துடன் நெல்லைப் பயிரிட்டால், கோனோ களை நீக்கும் கருவியினைப் பயன்படுத்தி பசுந்தாள் உரங்கள் 40 செமீ உயரம் வளர்ந்தவுடனோ அல்லது விதைத்து 30 நாட்களுக்குப் பிறகோ அவற்றை நெல் வயலிலில் அமுக்கிவிடலாம்

3. பசுந்தாள் உரங்கள் போட்டு ஒரு வாரம் கழித்து சுழலும் களை எடுப்பானைப் பயன்படுத்தவேண்டும். இதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதுடன், கரிம அமிலங்கள் உருவாகியிருந்தால் அவை மண்ணிலிருந்து வெளியேறவும் வழிவகை செய்யும்

ஈரமாக விதைப்பு செய்யப்படும் நெல்லை விதைப்பு செய்தல் (Sowing for Wet Seeded Puddled Lowland Rice)

  • ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு 60 கிலோ விதை தேவைப்படும்
  • ஈர வகை நாற்றங்காலுக்கு பயன்படுத்துவது போலவே, விதைகளை முளைக்க வைக்கவேண்டும்
  • நாற்றங்காலிலிருந்து பிடுங்கி நடவு செய்யப்படும் நெல் விதைகளை விதை நேர்த்தி செய்வது போலவே விதை நேர்த்தி செய்யவேண்டும்
  • உருளை வடிவ விதை விதைப்பானைக் கொண்டோ அல்லது நேரடியாக விதைகளை மெல்லிய நீர்ப்படலம் தண்ணீரில் தேங்கி இருக்கும்போதே விதைக்கலாம்
  • பசுந்தாள் உரத்தையும், நெல்லையும் ஒன்றாகவே பயிரிடுவது சிக்கனமாக இருப்பதோடு, உற்பத்தியும் அதிகரிக்கும். இதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நெல்-பசுந்தாள் உர விதையினைப் பயன்படுத்தவேண்டும்

தண்ணீர் தேங்கிய நிலங்களில் பயிரிடப்படும் நெல் ரகங்க்கள் (Varieties for Wet Seeded Puddled Lowland Rice)

நாற்றங்கால் மூலம் நடவு செய்யப்பட்டு பயிர் செய்யப்படும் அனைத்து நெல் ரகங்களையும், நேரடியாக ஈர விதையாக விதைத்து சாகுபடி செய்யலாம். எனினும் கீழ்க்கண்ட நெல் ரகங்கள் மிகவும் ஏற்றவை

தண்ணீர் தேங்கும் நிலங்களில் ஈர நெல்லை நேரடியாக விதைத்து சாகுபடி செய்யப்படும் நெல் (Cultivation of Wet Seeded Puddled Lowland Rice)

இடம்

எங்கெல்லாம் நாற்றங்கால் மூலம் நெல் நாற்றுகளை உற்பத்தி செய்ய சாத்தியக்கூறுகள் இல்லலையோ அங்கு ஈர விதை நெல்லை நேரடியாக விதைப்பு செய்யலாம்

நிலத்தினைத் தயார் செய்தல்

1. மே –ஜூலை மாதங்களில் மழை பொழியும் பொழுது தொடர்ந்து உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு, களைகள் அழிக்கப்படுவதுடன், மண்ணில் கட்டிகள் உடைக்கப்படுகின்றன

2. நாற்றங்காலிலிருந்து நாற்றுகளை பிடுங்கி நடும் முறையில் செய்வது போலவே தண்ணீருடன் வயலை உழவு செய்யவேண்டும். நிலத்தினை சமமாக இருக்குமாறு உழவு செய்யவது அவசியம்

3. நாற்றுகள் முளை விடும் போது தண்ணீர் திட்டுக்களாக வயலில் தேங்கியிருந்தாலும், சீக்கிரமாக நாற்றுகள் முள

Copy rights | Disclaimer | RKMP Policies