Best Viewed in Mozilla Firefox, Google Chrome

தண்டு துளைப்பானை இனங்கண்டறிதல் (Identification of insect pest of Paddy stemborer)

முட்டை- இப்பூச்சியின் முட்டைகள் மொத்தமாக இலைகளின் மேல் இடப்பட்டு அதன் மீது பஞ்சு போன்ற முடி காணப்படுதல்

இளநிலைக்கூட்டுப்புழு – வெளிர் மஞ்சள் நிறத்தில் அடர்ந்த பழுப்பு நிற தலையுடன் காணப்படுதல்

கூட்டுப்புழு- வெள்ளை நிற கூடு  

பெண் புழு- அடர் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இறக்கைகளில் கருப்பு நிற புள்ளிகள் காணப்படும். மேலும் அதன் இறக்கைகளில் கொத்தாக மஞ்சள் நிற முடிகள் காணப்படும்

ஆண் புழு- சிறியதாக, வெளிர் மஞ்சள் நிற முன் இறகுகளுடன் காணப்படும் கருப்புநிற புள்ளிகள் காணப்படுவதில்லை

21
Sep

தண்டு துளைப்பான் (Paddy stemborer)

தண்டு துளைப்பான் (Paddy stemborer)

1. பொதுவான பெயர் -நெற்பயிரின் தண்டுதுளைப்பான்

2. அறிவியல் பெயர் -ஸ்கிர்போபேகா இன்செர்டுளஸ்

3. உள்ளூர் பெயர் -தண்டு துளைப்பான்

தண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Paddy stemborer)

  • இலையின் நுனியில் பழுப்பு நிற தண்டு துளைப்பானின் முட்டைகள் காணப்படுதல்
  • நெற்பயிரின் மத்திய தண்டுப்பகுதியில் puzhu துளைத்த ஓட்டை காணப்படுதல்
  • நெற்பயிரின் மத்திய தண்டு காய்ந்து காணப்படுதல், இவ்வாறு காணப்படுவது ‘இறந்த இதயம்’ அல்லது ‘டெட் ஹார்ட்’ எனப்படும்  
  • வளர்ந்த நெற்செடி முழுவதும காய்ந்து காணப்படுதல். இது ‘வெள்ளை காது’ அல்லது “வைட் ஏர் ”எனப்படும்
21
Sep

நெல் கூட்டுப்புழு (Rice case worm )

நெல் கூட்டுப்புழு (Rice case worm )

1.பொதுப்பெயர் -நெல் கேஸ் புழு

2. அறிவியல் பெயர்—நிம்புலா டிபங்ட்டாலிஸ்

3.உள்ளூர் பெயர் - நெல் கூட்டுப்புழு

நெல் கூட்டுப்புழுவின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Rice case worm)

  • இலைகளிலுள்ள பச்சைநிறப் பகுதிகளை புழுக்கள் தின்று விடுவதால், இலைகள் வெள்ளை நிறத்தாள் போன்று மாறுதல்.  
  • முளைவிடும் இலை நுனிகள் வெட்டுப்பட்டு காணப்படுதல், உருளை வடிவில் சுருட்டப்பட்ட இலை பகுதிக்குள் புழுக்கள் காணப்படுதல்
  • உருளை வடிவிலான முளைவிடும் இலையின் பகுதிகள் தண்ணீரில் மிதத்தல்.

நெல் கூட்டுப்புழுவினை இனங்கண்டறிதல் (Identification of insect pest of Rice case worm)

  • இளநிலைக்கூட்டுப்புழு- ஒளிகசியும் வெளிர் பச்சைநிறத்தில் ஆரஞ்சு நிற தலையுடன் காணப்படுதல்
  • இளநிலைக்கூட்டுப்புழுவின் உடலின் பக்கங்களில் இழைவடிவ செதில்கள் காண

பச்சை தத்துப்பூச்சி (Green leafhopper)

1. பொதுவான பெயர்-பச்சைத் தத்துப்பூச்சி

2. அறிவியல் பெயர்- நெப்போடெட்டிக்ஸ் வைரஸென்ஸ்

3. உள்ளூர் பெயர்- பச்சை தத்துப்பூச்சி

பச்சைத் தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Green leafhopper)

  • இலையின் நுனியிலிருந்து அடிவரை மஞ்சள் நிறமாக மாறுதல்
  • நெல் டுங்ரோ வைரஸ், மஞ்சள் நெல் மற்றும் மாறும் மஞ்சள் நிற நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளுக்கான நோய் தாங்கிகளாக செயல்படுதல்

பச்சைத்தத்துப்பூச்சியினை இனங்கண்டறிதல் (Identification of insect pest of Green leafhopper )

முதிர்ச்சியடைந்த பூச்சிகள் – பச்சை நிற உடலுடன் கருப்பு நிற புள்ளிகள் காணப்படுதல். இறகுகளில் கருப்பு நிற பட்டை மற்றும் திட்டுகள காணப்படுதல்.

பச்சைத் தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்துதல் (Management of Green leafhopper)

  • பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற நெல் வக

தமிழகத்தில் நெல் சாகுபடி வளர்ச்சி விகிதம் (Rice growth rate in Tamilnadu)

1. வளர்ச்சி விகிதம் (1999-00 முதல் 2005-06 வரை): தமிழகத்தில் பத்தொன்பது மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில் பார்க்கும்போது சாகுபடி பரப்பளவு, மகசூல் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் வளர்ச்சி மிக மிகக் குறைந்துள்ளது.

2. விழுப்புரம் மாவட்டத்தில் சாகுபடி பரப்பளவும், திருவண்ணாமலை, சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரப்பளவு மற்றும் உற்பத்தியும், இராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டும் உற்பத்தி மற்றும் மகசூல் ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளன.

தமிழகத்தின் நெல் சாகுபடி பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தி திறன் (Rice area, production, productivity in Tamilnadu)

1. 1966-67 முதல் 2006-07 வரையான கடந்த நாற்பது ஆண்டுகளில், தமிழகத்தில் நெல் உற்பத்தி திறன் ஒரு ஹெக்ட்ருக்கு 1.5 டன் என்ற அளவிலிருந்து 3.4 டன்னாக உயர்ந்துள்ளது. இது, உயர் விளைச்சல் இரகங்கள் (HYVs) சாகுபடி செய்யப்படும் பரப்பளவு சீராக உயர்ந்து வரும் போக்கை (2005-06 இந்த அளவு 100%) காட்டுகின்றது .

2. 2000 முதல் கரீப் பருவத்தில் 6.6 சதவீதமும், ராபி பருவத்தில் 15 சதவீதமும் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்து வந்துள்ளது. இருந்த போதிலும் உயர் விளைச்சல் இரகங்களை பயன்படுத்துவதால் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளது.

நெல் சாகுபடி உழவியல் முறைகள் (Rice cultural practices)

1. ஊடு சாகுபடி (Udu cultivation): அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஏற்படும், வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்படாமல் இருக்க, குறுகியகால இரகங்களை 3:1 விகிதத்தில் நீண்டகால இரகங்களுடன் கலந்து நடவு செய்து, பின் தனித்தனியாக இரண்டு இரகங்களையும் அறுவடை செய்யும் முறையாகும்.

2. கைப்பாடு முறை (Kaipad system): அக்டோபர்-நவம்பர் மாதங்களில், வடகிழக்கு பருவமழை முடியும் தறுவாயில், வயலில் நீரை நிறுத்தி வைப்பதால் பயிர்க்கழிவுகள் மக்க வைக்கப்படும். பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நீரை வடிகட்டியபின், ஒரு மீட்டர் சுற்றளவு கொண்ட இரண்டு அடி உயர குன்றுகள் ஏற்படுத்தப்படும். தென்மேற்கு பருவமழை துவங்கும் தறுவாயில், இக்குன்றுகளின் உச்சிகள் சமப்படுத்தப்பட்டு கையளவு நெல் விதைகள் விதைக்கப்படும். ஒரு மாதத்திற்கு பிறகு, நாற்றுகள் பறிக்கப்பட்டு, வயல்

20
Sep

சாகுபடி பருவங்கள் (Production seasons)

சாகுபடி பருவங்கள் (Production seasons)

1. கார்/குறுவை/சொர்ணவாரி (மார்ச்-ஏப்ரல் முதல் ஜூன்-ஜூலை வரை); கார் [முதல் போகம்] – (ஏப்ரல்–மே முதல் ஜூலை-ஆகஸ்ட் வரை); முன் சம்பா [ஜூலை-ஆகஸ்ட் முதல் ஜனவரி-பிப்ரவரி வரை]

சம்பா [தனிப்பயிர்] (செப்டம்பர்-அக்டோபர் முதல் ஜனவரி-பிப்ரவரி வரை); பின் சம்பா (செப்டம்பர்-அக்டோபர் முதல் ஜனவரி-பிப்ரவரி வரை); தாளடி [இரண்டாம் போகம்] (செப்டம்பர்-அக்டோபர் முதல் பிப்ரவரி-மார்ச வரை); நவரை / கோடை (நவம்பர்-டிசம்பர் முதல் பிப்ரவரி-மார்ச் வரை)

நெல் சார்ந்த சாகுபடி முறைகள் (Rice Based Cropping Systems)

  • நெல்-நெல்,
  • நெல்-பச்சைப்பயறு,
  • நெல்-நிலக்கடலை,
  • நெல்-பருத்தி

மாநிலத்தின் பொருளாதாரத்தில் வேளாண்மையின் முக்கியத்துவம் (Importance of Agriculture in State Economy)

தமிழகத்தின் 36 சதவீத நிலப்பகுதி, அதாவது 4.7 மில்லியன் ஹெக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், 2.15 மில்லியன் ஹெக்டர், அதாவது 46% சாகுபடி பகுதி பாசன வசதி பெற்றுள்ளது. நெல், பருத்தி, நிலக்கடலை, உளுந்து, துவரை மற்றும் கரும்பு ஆகியவை முக்கிய பயிர்களாக சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தின் சாகுபடி அடர்த்தி குறியீடு 113 சதவீதமாகும்.

Copy rights | Disclaimer | RKMP Policies