Best Viewed in Mozilla Firefox, Google Chrome

23
Sep

நறுமண அரிசி - Aromatic Rice

நறுமண அரிசி - Aromatic Rice

நறுமண அரிசியில், சமைக்கும் போது வாசனை அளிக்கும் 2 அசிட்டைல் 1-1 பைரோலின் (2 acetyl 1-1 pyroline) என்ற மூலக்கூறு அதிகமாக காணப்படுகிறது. இவை அரிசியின் இரகத்தை பொருத்து மாறுபடும். நறுமணம் அற்ற அரிசிகளை சமைக்கும்போது, 2 அசிட்டைல் 1-1 பைரோலின் உள்ள பண்டனஸ் லேட்டிபோலியஸின் 2-3 இலைகளை சேர்ப்பதன் மூலம் நறுமணத்தை பெற முடியும்.

23
Sep

தட்டை அரிசி - Flaked rice

தட்டை அரிசி - Flaked rice

இதுவும் புழுங்கல் அரிசியிலிருந்து செய்யப்படுகிறது. அரிசியை மிருது பதத்திற்கு கொண்டு வர, 2-3 நாட்களுக்கு நெல் நீரில் ஊற வைக்கப்படுகிறது. பின் கொதி நீரில் சில நிமிடங்கள் ஊற வைக்கப்பட்டு நீர் வடிக்கப்படுகிறது. ஆழம் குறைவான மண் அல்லது இரும்பு வாணலியில் உமி நீங்கும் வரை நெல் சூடாக்கப்படுகிறது. மர உலக்கை கொண்டு குத்தி, உமி நீக்கப்படுகிறது மற்றும் தட்டை அரிசி கிடைக்கிறது. உமி புடைப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. தட்டை அரிசி, தட்டையாக, காகிதம் போல் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

23
Sep

அரிசி பொறி - Parched rice or puffed rice

அரிசி பொறி - Parched rice or puffed rice

இரும்பு அல்லது மண் வாணலியில் அதிக வெப்பத்தில் மணலை சூடாக்கி, அதில் இடுவதன் மூலம் பொறி கிடைக்கிறது. அரிசியை இதில் கிண்டும் போது, அரிசி உப்பி கரகர சுவைக்கு மாறுகிறது. பின் மணலில் இருந்து பொறி தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. உப்பு கலந்து அல்லது கலக்காமல் விற்பனை செய்யப்படும் பழுப்பு அல்லது தூய வெள்ளை நிற பொறி பெற, புழுங்கல் அரிசி பயன்படுத்தப்படுகிறது. பொறியை அப்படியே அல்லது பால் மற்றும் மோர் கலந்து சாப்பிடலாம்.

மண்பாண்டங்களில் கொதி நீரில் நெல் ஊற வைக்கப்படுகிறது. 2-3 நிமிடங்கள் கழித்து நீரை வடிகட்டிய பின், மண்பாண்டம் அப்படியே 8-10 மணி நேரம் கவிழ்த்து வைக்கப்படுகிறது. அடன் பின் நெல் வெயிலில் உலர்த்தப்படுகிறது. அவ்வாறு செய்யும்போது, நெல் உப்பி, மிருதுவான பொறியாக மாறுகிறது. கடைசியாக முறம் மூலம் புடைக்கப்பட்டு ம

23
Sep

தவிட்டு எண்ணெய் - Rice Bran Oil

தவிட்டு எண்ணெய் - Rice Bran Oil

நெல்லின் கரு மற்றும் உள் தவிட்டிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தவிட்டு எண்ணெய் எனப்படுகிறது. தவிட்டு எண்ணெய், அதிக ‘புகை உண்டாகும் அளவான (smoke point) 490 °F (254 °C)’ கொண்டிருப்பதாலும், குறைவான சுவை இருப்பதாலும், அதிக வெப்பம் தேவைப்படும் வறுத்தல் போன்ற சமையல் முறைகளில் பயன்படுத்த ஏற்றது.

மைசூரில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Central Food Technological Research Institute, Mysore), தவிட்டிலிருந்து எண்ணெயை பிரித்தெடுக்கத் தேவைப்படும் குறைந்த செலவு நுட்பங்களை உருவாக்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (National Institute of Nutrition, Hyderabad), இந்த எண்ணெய் உணவாக உண்ண ஏற்றது என சான்றளித்துள்ளது. இதிலுள்ள அதிகளவு வைட்டமின் E , ஆக்சிஜனேற்றம் அடையாமல் இருக்க உதவுகிறது. மற்ற எண்ணெய்களை விட அதிக நாள் வத்திருக்கக்கூடிய தன்

23
Sep

அரிசி தவிடு - Rice bran

அரிசி தவிடு - Rice bran

உடல் ஆரோக்கியத்திற்கு பலவித நன்மைகள் செய்யும் ‘ஆண்டி ஆக்ஸிடண்ட்கள்’ கொண்ட அரிசி தவிடு, நெல்லை அரிசியாக அரைக்கும் போது கிடைக்கும் ஒரு உப பொருளாகும். தவிட்டில் அதிகபட்சமாக 12-13% எண்ணெயும், 4.3% கட்டியாக்க முடியாத பகுதிகளும் உள்ளன. புரதத்திலுள்ள பிளாஸ்மா அளவுகளை குறைக்க உதவும் டோகோடிரினால்ஸ் (tocotrienols) வடிவிலான வைட்டமின் E, காமா-ஒரைசோனால் (gamma-oryzanol) மற்றும் பீட்டா-சிட்டோஸ்டீரால் (beta-sitosterol) ஆகியவை இதில் அடங்கும். பீட்டா-க்ளூக்கன் (beta-glucan), பெக்டின் (pectin), கம் (gum) ஆகிய நார்ப்பொருட்களும் தவிட்டில் அதிகம் உள்ளன. லிக்னின் அற்ற செல் சுவர்களில் காணப்படும் பெருலிக் அமிலமும் (ferulic acid) இதில் உள்ளது. எனினும், நச்சு மற்றும் புற்று நோய் உண்டாக்கக்கூடிய செயற்கை ஆர்சனிக்கும் (inorganic arsenic), சாதாரண குடிநீரை விட 20 மடங்கு அதிகம் உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அ

23
Sep

அரிசி ஸ்டார்ச் - Rice starch

அரிசி ஸ்டார்ச் - Rice starch

அமைலோஸ் மற்றும் அமைலோபெக்டின் ஆகிய இரண்டு வகையான ஸ்டார்ச் அரிசியில் உள்ளது. அமைலோஸ் என்பது, நீண்ட மற்றும் நேரான ஸ்டார்ச் மூலக்கூறுகளை கொண்டது. இதனால், சமைக்கும் போது கூழாவதில்லை. இந்த வகை ஸ்டார்ச் கொண்ட அரிசியில் சமைத்த உணவு உதிரியாக இருக்கும். நீளமான அரிசி கொண்ட இரகங்களில் அமைலோசஸ் அதிகமாகவும் அமைலோபெக்டின் குறைவாகவும் இருப்பதால், சாதம் ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்கும்.

அமைலோபெக்டின் சிக்கலான கிளை அமைப்பு மூலக்கூறுகளை கொண்டிருப்பதால், சமைக்கும் பொது இவை வெளியாகி சாதம் ஒட்டிக்கொள்கிறது. மிதமான நீளமுள்ள அரிசி இரகங்களில் இவை அதிகம் காணப்படுவதால், குளிர்ச்சியாக பறிமாறப்படும் பொங்கல், சாலட், கஞ்சி போன்றவை சமைக்க இவை மிக ஏற்றவை. குச்சிகள் (chopsticks) மூலம் உண்ணும் வழக்கமுள்ள ஆசிய நாடுகளில், இந்த வகை அரிசி சம

அரிசி உபயோகக் குறிப்புகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் - RICE RECEIPES AND VALUE ADDED PRODUCTS

இந்தியாவில் மட்டுமன்றி, இலங்கை, பர்மா, சீனா, மற்றும் ஜப்பான் போன்ற தெற்காசிய நாடுகளிலும் அரிசி முக்கிய உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அரிசியில் மாவுச்சத்து ஸ்டார்ச் வடிவில் கிடைக்கப்பெறுகிறது. அரிசியில் போதுமான அளவு புரதசத்து இருந்தாலும், கொழுப்பு, இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் குறைவாகவே உள்ளன. 100 கிராம் அரிசியிலிருந்து 335 கலோரி எரிசக்தி கிடைக்கிறது.

22
Sep

இலைப்பேன் (Thrips)

இலைப்பேன் (Thrips)

1. பொதுப்பெயர் -திரிப்ஸ்

2. அறிவியல் பெயர் - ஸ்டென்க்கோடோதிரிப்ஸ் பைபார்மிஸ்

3. உள்ளூர் பெயர் - இலைப்பேன்

இலைப்பேன் தாக்குதலின் அறிகுறிகள் (Symptoms of damage of Thrips)

  • மென்மையான இலைகள் கிழிந்து விடுவதுடன் அவற்றிலுள்ள சத்தையும் உறிஞ்சிவிடுதல்
  • இளம் நாற்றுகளின் இலைகளில் மஞ்சள் அல்லது வெள்ளை நிற கோடுகள் தோன்றுதல்
  • இலையின் நுனியிலிருந்து அடிவரை இலை சுருண்டு காணப்படுதல்

இலைப்பேன் நாற்றங்காலுக்கும், நடவு செய்த வயலிலும் சேதத்தினை ஏற்படுத்தும்

இலைப்பேனினை இனங்கண்டறிதல் (Identification of Thrips)

  • வயது முதிர்ந்த பூச்சிகள் அடர்ந்த பழுப்பு நிறத்துடன் காணப்படும்

இலைப்பேனைக் கட்டுப்படுத்துதல் (Management of Thrips)

நாற்றங்காலிலேயே கீழ்க்கண்ட ஏதாவதொரு பூச்சிக்கொல்லி மருந்தினைத் தெளிக்கவும்

  • பாஸ்பாமிடான் 40 SL – 50 மில

கதிர் நாவாய் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் (Management of Rice earhead bug )

கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்து பொடியை பூ விடும் தருணத்திலும், பின்பு ஒரு வாரம் கழித்தும் ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ என்ற விகிதத்தில் தூவ வேண்டும்

  • குவினால்பாஸ் 1.5 D
  • கார்போரைல் 10 D
  • மேலத்தியான் 5 D
  • கே கே எம் 10 D
  • கே கே எம் பவுடரில் அகோரஸ் கலாமஸ் ரைசோம் பொடி 10 % மும் 90% சாம்பல் பொடியும் கலந்திருக்கும்
  • இந்த பொடி கதிர்நாவாய் பூச்சியினை விரட்டும் தன்மை படைத்தது

கீழ்க்கண்ட மருந்துகளை மேற்கூறியவாறு இரண்டு முறை தெளிக்கலாம்

  • பென்தியான் 100 EC மருந்தினை ஒரு ஹெக்டேருக்கு 500 மிலி வீதம்

வேப்ப விதையிலிருந்து பெறப்படும் வடிகரைசல் 5% ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ வீதம் அல்லது நொச்சி எனப்படும் புரோஸ்பிஸ் இலையின் வடிகரைசல் 10%

22
Sep

கதிர் நாவாய் பூச்சி (Rice earhead bug)

கதிர் நாவாய் பூச்சி (Rice earhead bug)

1. பொதுப்பெயர் – நெல் இலைக்காதுப்பூச்சி

2. அறிவியல் பெயர் - லெப்டோகொரைசா அக்யூட்டா

3. உள்ளூர் பெயர்- கதிர் நாவாய் பூச்சி

கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptoms of damage of Rice earhead bug)

  • பிஞ்சு நிலையிலிருக்கும் தானியங்களின் சத்தை உறிஞ்சிவிடுதல்
  • தானியங்கள் அனைத்தும் உமி போன்று மாறிவிடுதல்
  • பூச்சிகள் நெற்கதிர்களை உண்ணும்பொழுது கதிர்களிலுள்ள நெல் மீது கருப்பு நிற ஓட்டைகள் தோன்றுதல்
  • நெற்கதிர்களின் பால் பருவத்தில் பூச்சியின் வாடை அடித்தல்
Copy rights | Disclaimer | RKMP Policies