Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இலைநிற அளவுகோலின் பயன்பாடுகள் யாவை? (What are the uses of LCC?)

  • விவசாயிகள் இந்த அளவுகோலில் உள்ள நிறங்களை நெற்பயிரின் இலைக லோடு ஒப்பிட்டு, நெற்பயிருக்கேற்ற நைட்ரஜன் சத்தினை அளிக்க வேண்டிய நேரத்தை கண்டறிய முடியும்
  • விவசாயிகள் தங்கள் நெற்பயிருக்குத் தேவைப்படும் நைட்ரஜன் அளவு தேவைப்படும் அளவினை விட குறைவாக இருப்பதை இலைகளை இந்த அளவுகோலில் உள்ள நிறங்களுடன் ஒப்பிட்டு கண்டறிந்து அதற்கேற்றவாறு செயல்படலாம்.

இலை நிற அளவுகோல் என்றால் என்ன? (What is LCC?)

  • இலையின் நிற அளவு அளவுகோல் நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்து அளவைக் கண்டறிய உதவும் ஒரு அளவுகோல். எளிதில் உபயோகிக்கக்கூடிய, விலை குறைந்த தொழில்நுட்பமாகும்
  • இது ஒரு அளவுகோல் போன்று 6 அங்குல நீளத்தில், அதிக தரமுடைய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கும். இதில் இளம் மஞ்சள் கலந்த பச்சை நிறம் (எண்-1) முதல் கரும்பச்சை (எண்-6) நிறங்கள் வரை இருக்கும்

இந்த நிறங்களில் நெற்பயிரின் இலைகளில் இருப்பது போன்றே நரம்புகள் வரையப்பட்டிருக்கும்

03
Sep

SSNMன் அங்கங்கள் (components of SSNM)

SSNMன் அங்கங்கள் (components of SSNM)

பயிர்களுக்கு போதுமான அளவு உரங்கள் அளிக்க கீழ்க்கண்ட கருவிகளும், தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன

  • இலையின் நிற அளவு அளவுகோலைப் பயன்படுத்தி நெற்பயிருக்குத் தேவைப்படும் நைட்ரஜன் உரத்தினை கண்டுபிடித்தல்.
  • பயிருக்கு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து தேவையினை கண்டறிய ஒமிசன் பிளாட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.
03
Sep

SSNMன் பயன்பாடுகள் (Use of SSNM)

SSNM ன் பயன்பாடுகள் (Use of SSNM)

  • சரியான அளவில் உரங்களை உபயோகப்படுத்துவதால் லாபத்தை அதிகரித்தல்
  • சரியான விகிதத்தில் உரங்களை மண்ணில் இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை சீராக பராமரித்தல்
  • சரியான விகிதத்தில் சத்துகள் மண்ணில் அளிக்கப்படுவதால் பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதலை குறைத்தல்.
  • தேவைக்கு அதிகமாக உரங்களை உபயோகப்படுத்துவதால் மண், தண்ணீர் மற்றும் சுற்றுபுறத்தில் அதிகமான உரங்களால் ஏற்படும் மாசிலிருந்து பாதுகாத்தல்.

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் தேவை (Need for SSNM)

பாசன நெற்பயிருக்கு இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறையில் முறையாக உரங்களை அளிப்பது அவசியம். ஏனெனில்

  • மண்ணின் வளம் நிலத்திற்கு நிலம் வேறுபடும். எனவே பயிர்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து சத்துக்களின் அளவும் ஒரே நிலத்திற்குள் வேறுபடும்
  • பட்டத்திற்கு பட்டம் , ஆண்டிற்கு ஆண்டு , பயிரின் வளர்ச்சி நிலைகளுக்கேற்றவாறு தேவைப்படும் சத்துக்களின் அளவு மாறுபடும்

இவ்வாறு மண்ணின் வளம், பயிர் சத்துகளின் தேவை பரிந்துரைக்கப்பட்ட அடி உரங்கள் அளிப்பதால் முறையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை . ஏனெனில் நிர்ணயிக்கப்பட்ட உரங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மண்ணில் இடப்படுகின்றன. பயிருக்கேற்ற சத்துகள் மண்ணில் குறைவாக இருக்கின்றன. இந்த

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை (Site Specific Nutrient Management (SSNM) Technology for Irrigated Rice)

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை எனப்படுவது நெற்பயிரின் தேவைக்கேற்ப சத்துகளை சரியான நேரத்தில் அளிப்பதாகும். இந்த மேலாண்மை முறையின் மூலம் நெற்பயிர் செய்யப்படும் இடங்களுக்கேற்றவாறும், காலநிலைக்கேற்றவாறும் அப்பயிருக்கு தேவையான உரங்களை அளிப்பது உறுதி செய்யப்படுகிறது. இம்முறையின் மூலம் நெற்பயிருக்கு உரங்கள்

  • தேவைப்படும் நேரத்தில்
  • போதுமான அளவில்
  • சரியான விகிதத்தில்
  • சரியான முறையில் அளிக்கப்படுகின்றன

இவ்வாறு உரங்களை அளிப்பதால் நெற்பயிருக்குத் தேவைப்படும் ஊட்டச்சதுக்களின் தேவை மற்றும் இருப்புக்கு இடையே உள்ள குறைபாட்டை சரி செய்ய முடியும் . இவ்வூட்டச்சத்துகள் மண் மற்றும் அங்கக கரி

25
Aug

இரகத்தின் பெயர் – TNR 2

இரகத்தின் பெயர் – TNR 2

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு:

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 200

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: ஆழ்நிலை நீர் ஆராய்ச்சி நிலையம் ( Deep Water Research Station), தலைஞாயிறு

6. சிறப்பம்சங்கள்: ஆழமாக நீர் நிற்கும் நிலங்களுக்கு ஏற்ற இரகம். நீண்ட, குண்டு, சிகப்பு அரிசி

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – TNR 1

இரகத்தின் பெயர் – TNR 1

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1964

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 140

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: ஆழ்நிலை நீர் ஆராய்ச்சி நிலையம் ( Deep Water Research Station), தலைஞாயிறு

6. சிறப்பம்சங்கள்: ஆழமாக நீர் நிற்கும் நிலங்களுக்கு ஏற்ற இரகம். நீண்ட, குண்டு, சிகப்பு அரிசி

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – PVR1

இரகத்தின் பெயர் – PVR1

1. பெற்றோர் விபரம்: SR 26B/MDU 1

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1966

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 145

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: களர் உவர் ஆராய்ச்சி நிலையம்

6. சிறப்பம்சங்கள்: களர் உவர் தாங்கி வளரக்கூடிய இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

25
Aug

இரகத்தின் பெயர் – PLR 2

இரகத்தின் பெயர் – PLR 2

1. பெற்றோர் விபரம்: ப்யூர்லைன்

2. வெளியிடப்பட்ட ஆண்டு: 1942

3. சாகுபடி காலம் (நாட்களில்) - 105

4. வளரும் சூழல்: பாசன வசதியுள்ள வயல்கள்

5. வெளியிட்ட நிறுவனம்: வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பாலூர்

6. சிறப்பம்சங்கள்: நவரை பட்டத்திற்கு ஏற்ற இரகம்

7. சாகுபடி பரிந்துரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

Copy rights | Disclaimer | RKMP Policies