Best Viewed in Mozilla Firefox, Google Chrome

15
Sep

வேக வைத்தல் (Parboiling)

வேக வைத்தல் (Parboiling)

1. பச்சைத் தானியங்களை வெப்பம் மூலம் வேகவைத்து பின்பு காய வைத்து அரைத்து வேக வைத்த தானியங்கள் பெறப்படுகின்றன

2. நெல்லை வேகவைக்கும் முறை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் 50 சதவிகித நெல் வேகவைக்கப்பட்டு பின்பு உபயோகப்படுத்தப்படுகிறது

3. பொதுவாக நெல்லை வேகவைக்கும் போது மூன்று செயல் முறைகள் பின்பற்றப்படுகின்றன

  • ஊறவைத்தல்
  • ஆவி மூலம் வேகவைத்தல்
  • காய வைத்தல். இந்த மூன்று செயல் முறைகளும் வேகவைத்துப் பெறப்படும் நெல்லின் குண நலன்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன
  • அரிசியின் தரத்தினை மேம்படுத்துவதில் நெல்லை அரைப்பதற்கு முன்பு வேகவைப்பது பெரும்பங்கு வகிக்கிறது
  • இந்தியாவில் பாரம்பரியமாக பின்பற்றப்படும் நெல் வேகவைக்கும் முறை வெவ்வேறு வழிக

பச்சை தத்துப்பூச்சி (Green leafhopper)

1. பொதுவான பெயர்-பச்சைத் தத்துப்பூச்சி

2. அறிவியல் பெயர்- நெப்போடெட்டிக்ஸ் வைரஸென்ஸ்

3. உள்ளூர் பெயர்- பச்சை தத்துப்பூச்சி

பச்சைத் தத்துப்பூச்சியின் தாக்குதலின் அறிகுறிகள் (Symptom of damage of Green leafhopper)

  • இலையின் நுனியிலிருந்து அடிவரை மஞ்சள் நிறமாக மாறுதல்
  • நெல் டுங்ரோ வைரஸ், மஞ்சள் நெல் மற்றும் மாறும் மஞ்சள் நிற நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளுக்கான நோய் தாங்கிகளாக செயல்படுதல்

பச்சைத்தத்துப்பூச்சியினை இனங்கண்டறிதல் (Identification of insect pest of Green leafhopper )

முதிர்ச்சியடைந்த பூச்சிகள் – பச்சை நிற உடலுடன் கருப்பு நிற புள்ளிகள் காணப்படுதல்.

இறகுகளில் கருப்பு நிற பட்டை மற்றும் திட்டுகள காணப்படுதல்.

பச்சைத் தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்துதல் (Management of Green leafhopper)

  • பூச்சிகளுக்கு எதிர்ப்புத்திறன் பெற்ற நெல்

தமிழ்நாட்டில் நெல் பயிரிடும் சூழ்நிலைகள் (Rice ecosystems of Tamilnadu)

தமிழ்நாட்டில் நெல் கீழ்க்கண்ட நான்கு சூழ்நிலைகளில் பயிர் செய்யப்படுகிறது அவையாவன

1. மேட்டுப்பாங்கான நிலங்களில் சாகுபடி செய்தல்

2. மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்தல்

3. பாதி வறண்ட நிலங்களில் சாகுபடி செய்தல்

4. தாழ்வான பகுதிகளில் சாகுபடி செய்தல்

அ. மேடான நிலங்களில் சாகுபடி

மானாவாரி மற்றும் பாதி வறண்ட சூழ்நிலை

ஆ. மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்தல்

இம்முறையில் நெல் விதைகள் நாட்டு உழவு மூலம் உழவு செய்து நேரடியாக நிலங்களில் தெளிக்கப்பட்டு அல்லது ஊன்றப்படுகின்றன. இம்முறையில் பயிர்கள் பருவ மழையினை நம்பி பயிர் செய்யப்படுகின்றன

இ. பாதி வறண்ட நிலங்கள்

வறண்ட்ட விதைகள் பருவ மழைக்கு முன்பாகவோ அல்லது பருவ மழைக்குப் பின்பாகவோ மழை வருவதை ஊகித்து அல்லது மழை பெய

மாநிலத்தில் நெற்பயிர் சாகுபடி மேம்பாட்டிற்கான்ன திட்டங்கள் - Special development programmes in rice sector of the state

தமிழ்நாட்டில் தீவிர நெல் சாகுபடியில், ஒருங்கிணைந்த தானிய உற்பத்தி மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தியதால் 2007-08ஆம் ஆண்டில் ஒரு ஹெக்டேருக்கு 10 முதல் 13.38 மி.டன்கள் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. எஸ் ஆர் ஐ தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சிகள் 58450 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு, 11260 ஹெக்டேர் அளவுடைய நெல் சாகுபடி செய்யப்படும் வயல்களில் செய்முறை விளக்கங்களும் செய்து காண்பிக்கப்பட்டது. தீவிர கிராம அளவிலான கூட்டங்கள், விரிவாக்கப்பணியாளர்களால் நடத்தப்பட்டன. மேலும் இந்த திட்டத்தைப் பற்றிய பெரிய அளவிலான விளம்பரங்களும், பத்திரிக்கை செய்திகளும் 4.2 ஹெக்டேர் நெல் பயிரிடும் இடங்களில் 2007-08ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. எஸ் ஆர் ஐ திட்டங

06
Sep

CO (R) 48 சாகுபடிக் குறிப்புகள்

CO (R) 48 சாகுபடிக் குறிப்புகள்

CO (R) 48 சாகுபடிக் குறிப்புகள்:

விதை அளவு: எக்டருக்கு 40 கிலோ

நாற்றங்கால்: 20 சென்ட்

விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ்

டி.ஏ.பி: சென்ட் ஒன்றுக்கு 1 கிலோ வீதம்

நாற்றின் வயது: 25 நாட்கள்

இடைவெளி: 20 X 10 செ.மீ (ஒரு சதுர மீட்டரில் 50 குத்துக்கள்)

உரமிடும் அட்டவணை: மண் ஆய்வு அடிப்படையில் அல்லது கீழ்கண்ட

அட்டவணையை பயன்படுத்திக் கொள்ளலாம்

எரு / கம்ப்போஸ்ட்: எக்டருக்கு 12.5 டன் (அல்லது)

பசுந்தாள் உரம்: எக்டருக்கு 6.25 டன்

நாற்றங்கால் மற்றும் வயலில் பயிர் பாதுகாப்பு நடைமுறைகள்: பொருளாதார சேத நிலை அடிப்படையிலான ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறைகள்

அறுவடை: பூ பூத்து 30 முதல் 35 நாட்களில்

06
Sep

CO (R) 48

CO (R) 48

பெற்றோர் விபரம்: CO43 / ASD 19

சாகுபடி காலம்: 130 – 135 நாட்கள்

பட்டம்: தாளடி

மகசூல்: எக்டருக்கு 6000 கிலோ

CO (R) 48 – ன் சிறப்பம்சங்கள்:

  • வெள்ளைப் பொன்னி மற்றும் BPT 5204 இரகங்களை விட முறையே 10 மற்றும் 17 சதவீதம் கூடுதல் மகசூல்  
  • தத்துப்பூச்சிகள், குலை நோய், துங்ரோ வைரஸ் நோய், இலைகருகல் ஆகியவற்றுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது  
  • வெள்ளைப் பொன்னி போல், மித மெல்லிய, வெள்ளை நிற சன்ன அரிசி

நெல் மற்றும் நெல் சார்ந்த பயிரிடும் முறைகள் Rice and rice based cropping systems

தமிழ்நாட்டில், கீழ்கண்ட பயிரிடும் முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன:

1. நெல் – நெல் – நெல்

2. நெல் – நிலக்கடலை

நெல் – நெல் – நெல் Rice-Rice-Rice

1. அதிக மழை பெய்யும் மற்றும் கோடை மாதங்களில் பாசன வசதியுள்ள பகுதிகள், அதிக ஈரப்பதத்தை தக்க வைக்கக்கூடிய மற்றும் குறைந்த நீர் ஊடுருவல் உள்ள மண் வகைகள் ஆகியவற்றுக்கு இந்த வகை பயிரிடும் முறை ஏற்றது.

2. பாசனக் கால்வாய்கள் மூலம் நீர் பெறும் தமிழகத்தின் சிலப்பகுதிகள், 300% அடர்த்தியில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறான பகுதிகளில், மூறு போகங்கள் நெல் விளைவிக்க ஏற்றவை.

நிலக்கடலை Groundnut

1. இவ்வகை பயிர் சாகுபடி முறையை தமிழக விவசாயிகள் கடைபிடிக்கிறார்கள்

2. நெல் அறுவடை முடிந்த பிறகு, கோடைப்பருவ நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது

உரங்கள் அளிக்கப்படாத வயல்களை பராமரிக்கும் வழிமுறைகள் (Guidelines for maintaining omission plots)

பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்கள் தெளிக்கப்படாமல் நெல் பயிர் வளர்க்கப்படும் முக்கியநோக்கம் இடத்திற்கேற்றவாறு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களின் அளவினை கண்டறிந்து அவற்றை பரிந்துரைப்பதாகும். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட அளவு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்கள் தெளிக்கப்பட்ட வயல்களில் எடுக்கப்படும் அறுவடைக்கும், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் தெளிக்கப்படாத நெல் வயல்களிலிருந்து எடுக்கப்படும் அறுவடைக்கும் உள்ள வித்தியாசத்தினைக் கொண்டு நெற்பயிருக்குத் தேவைப்படும் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸின் தேவையினை அறிவதுடன், மண்ணிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தின் அளவினையும் கண்டறியலாம். இதன் மூலம் பயிருக்கு அளிக்கப

உபயோகிக்கும் வழிமுறைகள் (User guidelines)

1. நெல்நாற்றின் இலையினை நாற்றங்காலிருந்து வயலில் எடுத்து நட்ட 14ம் நாள் முதலும், விதைநெல் நடவு செய்த 21ம் நாள் முதலும் இலை நிற அளவுகோலை பயன்படுத்தி நெற்பயிருக்குத் தேவையான சத்துகளின் அளவினை கண்டறியலாம்.

2. பத்து நாற்றங்கால் நெற்பயிரின் கொத்துகளிலுள்ள நன்கு விரிந்த இளம் இலை நுனியில் உள்ள நிறத்தினை இலை நிற அளவுகோலினைப் பயன்படுத்தி கீழ்க்கண்டவாறு அளவிடலாம்

  • தேர்வு செய்யப்பட்ட நாற்றங்கால் கொத்திலுள்ள நெற்பயிரின் நன்கு விரிந்த மேற்பகுதியிலுள்ள இளம் இலையின் நுனிப்பகுதியினை தேர்வு செய்யவும்
  • இலைநிற அளவுகோலினை தேர்வு செய்யப்பட்ட இலையின் நடுப்பகுதிக்கு அருகில் வைத்து நிறத்தினை ஒப்பிடவும்
  • இலையினை நெற்பயிரிலிருந்து பிரிக்கக்கூடாது
  • இலையினை உங்கள் உடல் நிழலில் வைத்து சூரிய ஒள
Copy rights | Disclaimer | RKMP Policies