Best Viewed in Mozilla Firefox, Google Chrome

நெல் வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து அவற்றை முறையாகச் செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பை முழுவதும் தடுக்க முடியும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
 இதுதொடர்பாக, வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். சத்தியஜோஸ் கூறியது:
 தமிழகத்தில் 4 வகையான வயல் எலிகள் காணப்படுகின்றன. நெல் வயலில் பொதுவாக விதை ஊன்றிய நாள்முதல் அறுவடை வரையிலும், விதை, தானியங்கள் சேமித்து வைக்கும் கிடங்குகளிலும் எலிகளால் தொடர்ந்து சேதமேற்படுகிறது. நெல் வயலில் கதிர் விளையும் தருணத்தில் நெற்கதிர்களைக் கத்தரித்து எலிகள் தங்களது வளைக்குள் கொண்டு சென்றுவிடுகின்றன.
 ஓர் இணை எலிகள் மூன்று ஆண்டுகளில் 35 கோடி எலிகளாகப் பெருகும். எலிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது அதன் பாதிப்பும் அதிகமாகும். எனவே, எலிகளைக் கட்டுப்படுத்த ஒருங்
Copy rights | Disclaimer | RKMP Policies