Best Viewed in Mozilla Firefox, Google Chrome

இரண்டுமுறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தோடு 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு, ஒருகிலோ அசோபாஸ் அல்லது தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் வைத்திருந்து தூவ வேண்டும். மேல் உரம் கொடுத்து 10 முதல் 15 நாட்களுக்கு பிறகு, வேளாண்மைத்துறை வெளியிட்டிருக்கும் "பச்சைவண்ண அட்டையைப் (லீப் கார்டு) பயன்படுத்தி இலைகளின் நிறத்தைப் பார்க்க வேண்டும். அதில் மூன்றாம் எண்ணுக்கு குறைவாக இருந்தால் மட்டும் மீண்டும் ஒருமுறை அதே உரக் கலவையைத் தெளிக்க வேண்டும்.

நெற்பயிரின் வளர்ச்சிக்கு இயற்கை முறை: மாதம் ஒருமுறை 20 லிட்டர் அமுதக்கரைசல் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீருடன் கலந்து விடலாம். பயிரின் வளர்ச்சியைப்பொறுத்து 25 மற்றும் 30ம் நாட்களில் மட்டும் 10 லிட்ட

உரங்கள் அளிக்கப்படாத வயல்களை பராமரிக்கும் வழிமுறைகள் (Guidelines for maintaining omission plots)

பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்கள் தெளிக்கப்படாமல் நெல் பயிர் வளர்க்கப்படும் முக்கியநோக்கம் இடத்திற்கேற்றவாறு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களின் அளவினை கண்டறிந்து அவற்றை பரிந்துரைப்பதாகும். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட அளவு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்கள் தெளிக்கப்பட்ட வயல்களில் எடுக்கப்படும் அறுவடைக்கும், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் தெளிக்கப்படாத நெல் வயல்களிலிருந்து எடுக்கப்படும் அறுவடைக்கும் உள்ள வித்தியாசத்தினைக் கொண்டு நெற்பயிருக்குத் தேவைப்படும் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸின் தேவையினை அறிவதுடன், மண்ணிலிருந்து இயற்கையாக கிடைக்கும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தின் அளவினையும் கண்டறியலாம். இதன் மூலம் பயிருக்கு அளிக்கப

உபயோகிக்கும் வழிமுறைகள் (User guidelines)

1. நெல்நாற்றின் இலையினை நாற்றங்காலிருந்து வயலில் எடுத்து நட்ட 14ம் நாள் முதலும், விதைநெல் நடவு செய்த 21ம் நாள் முதலும் இலை நிற அளவுகோலை பயன்படுத்தி நெற்பயிருக்குத் தேவையான சத்துகளின் அளவினை கண்டறியலாம்.

2. பத்து நாற்றங்கால் நெற்பயிரின் கொத்துகளிலுள்ள நன்கு விரிந்த இளம் இலை நுனியில் உள்ள நிறத்தினை இலை நிற அளவுகோலினைப் பயன்படுத்தி கீழ்க்கண்டவாறு அளவிடலாம்

  • தேர்வு செய்யப்பட்ட நாற்றங்கால் கொத்திலுள்ள நெற்பயிரின் நன்கு விரிந்த மேற்பகுதியிலுள்ள இளம் இலையின் நுனிப்பகுதியினை தேர்வு செய்யவும்
  • இலைநிற அளவுகோலினை தேர்வு செய்யப்பட்ட இலையின் நடுப்பகுதிக்கு அருகில் வைத்து நிறத்தினை ஒப்பிடவும்
  • இலையினை நெற்பயிரிலிருந்து பிரிக்கக்கூடாது
  • இலையினை உங்கள் உடல் நிழலில் வைத்து சூரிய ஒள

இலைநிற அளவுகோலின் பயன்பாடுகள் யாவை? (What are the uses of LCC?)

  • விவசாயிகள் இந்த அளவுகோலில் உள்ள நிறங்களை நெற்பயிரின் இலைக லோடு ஒப்பிட்டு, நெற்பயிருக்கேற்ற நைட்ரஜன் சத்தினை அளிக்க வேண்டிய நேரத்தை கண்டறிய முடியும்
  • விவசாயிகள் தங்கள் நெற்பயிருக்குத் தேவைப்படும் நைட்ரஜன் அளவு தேவைப்படும் அளவினை விட குறைவாக இருப்பதை இலைகளை இந்த அளவுகோலில் உள்ள நிறங்களுடன் ஒப்பிட்டு கண்டறிந்து அதற்கேற்றவாறு செயல்படலாம்.

இலை நிற அளவுகோல் என்றால் என்ன? (What is LCC?)

  • இலையின் நிற அளவு அளவுகோல் நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்து அளவைக் கண்டறிய உதவும் ஒரு அளவுகோல். எளிதில் உபயோகிக்கக்கூடிய, விலை குறைந்த தொழில்நுட்பமாகும்
  • இது ஒரு அளவுகோல் போன்று 6 அங்குல நீளத்தில், அதிக தரமுடைய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருக்கும். இதில் இளம் மஞ்சள் கலந்த பச்சை நிறம் (எண்-1) முதல் கரும்பச்சை (எண்-6) நிறங்கள் வரை இருக்கும்

இந்த நிறங்களில் நெற்பயிரின் இலைகளில் இருப்பது போன்றே நரம்புகள் வரையப்பட்டிருக்கும்

03
Sep

SSNMன் அங்கங்கள் (components of SSNM)

SSNMன் அங்கங்கள் (components of SSNM)

பயிர்களுக்கு போதுமான அளவு உரங்கள் அளிக்க கீழ்க்கண்ட கருவிகளும், தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன

  • இலையின் நிற அளவு அளவுகோலைப் பயன்படுத்தி நெற்பயிருக்குத் தேவைப்படும் நைட்ரஜன் உரத்தினை கண்டுபிடித்தல்.
  • பயிருக்கு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து தேவையினை கண்டறிய ஒமிசன் பிளாட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.
03
Sep

SSNMன் பயன்பாடுகள் (Use of SSNM)

SSNM ன் பயன்பாடுகள் (Use of SSNM)

  • சரியான அளவில் உரங்களை உபயோகப்படுத்துவதால் லாபத்தை அதிகரித்தல்
  • சரியான விகிதத்தில் உரங்களை மண்ணில் இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை சீராக பராமரித்தல்
  • சரியான விகிதத்தில் சத்துகள் மண்ணில் அளிக்கப்படுவதால் பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதலை குறைத்தல்.
  • தேவைக்கு அதிகமாக உரங்களை உபயோகப்படுத்துவதால் மண், தண்ணீர் மற்றும் சுற்றுபுறத்தில் அதிகமான உரங்களால் ஏற்படும் மாசிலிருந்து பாதுகாத்தல்.

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் தேவை (Need for SSNM)

பாசன நெற்பயிருக்கு இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறையில் முறையாக உரங்களை அளிப்பது அவசியம். ஏனெனில்

  • மண்ணின் வளம் நிலத்திற்கு நிலம் வேறுபடும். எனவே பயிர்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து சத்துக்களின் அளவும் ஒரே நிலத்திற்குள் வேறுபடும்
  • பட்டத்திற்கு பட்டம் , ஆண்டிற்கு ஆண்டு , பயிரின் வளர்ச்சி நிலைகளுக்கேற்றவாறு தேவைப்படும் சத்துக்களின் அளவு மாறுபடும்

இவ்வாறு மண்ணின் வளம், பயிர் சத்துகளின் தேவை பரிந்துரைக்கப்பட்ட அடி உரங்கள் அளிப்பதால் முறையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை . ஏனெனில் நிர்ணயிக்கப்பட்ட உரங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மண்ணில் இடப்படுகின்றன. பயிருக்கேற்ற சத்துகள் மண்ணில் குறைவாக இருக்கின்றன. இந்த

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை (Site Specific Nutrient Management (SSNM) Technology for Irrigated Rice)

பாசன நெல் பயிருக்கேற்ற இடம் சார்ந்த ஊட்டச்சத்து மேலாண்மை எனப்படுவது நெற்பயிரின் தேவைக்கேற்ப சத்துகளை சரியான நேரத்தில் அளிப்பதாகும். இந்த மேலாண்மை முறையின் மூலம் நெற்பயிர் செய்யப்படும் இடங்களுக்கேற்றவாறும், காலநிலைக்கேற்றவாறும் அப்பயிருக்கு தேவையான உரங்களை அளிப்பது உறுதி செய்யப்படுகிறது. இம்முறையின் மூலம் நெற்பயிருக்கு உரங்கள்

  • தேவைப்படும் நேரத்தில்
  • போதுமான அளவில்
  • சரியான விகிதத்தில்
  • சரியான முறையில் அளிக்கப்படுகின்றன

இவ்வாறு உரங்களை அளிப்பதால் நெற்பயிருக்குத் தேவைப்படும் ஊட்டச்சதுக்களின் தேவை மற்றும் இருப்புக்கு இடையே உள்ள குறைபாட்டை சரி செய்ய முடியும் . இவ்வூட்டச்சத்துகள் மண் மற்றும் அங்கக கரி

Copy rights | Disclaimer | RKMP Policies