Best Viewed in Mozilla Firefox, Google Chrome

Tamilnadu

19
Jul

நெல் வயலில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

நெல் வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து அவற்றை முறையாகச் செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பை முழுவதும் தடுக்க முடியும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
 
இதுதொடர்பாக, வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். சத்தியஜோஸ் கூறியது:
 
தமிழகத்தில் 4 வகையான வயல் எலிகள் காணப்படுகின்றன. நெல் வயலில் பொதுவாக விதை ஊன்றிய நாள்முதல் அறுவடை வரையிலும், விதை, தானியங்கள் சேமித்து வைக்கும் கிடங்குகளிலும் எலிகளால் தொடர்ந்து சேதமேற்படுகிறது. நெல் வயலில் கதிர் விளையும் தருணத்தில் நெற்கதிர்களைக் கத்தரித்து எலிகள் தங்களது வளைக்குள் கொண்டு சென்றுவிடுகின்றன.
 
ஓர் இணை எலிகள் மூன்று ஆண்டுகளில் 35 கோடி எலிகளாகப் பெருகும். எலிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது அதன் பாதிப்பும் அதிகமாகும். எனவே, எலிகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தடுப்பு முறைகளைக் கையாள வேண்டியது அவசியம்.
 
பயிரிடத் தொடங்கும் முன்பு வயல் வரப்புகளில் காணப்படும் எலி வளைகளைத் தோண்டி அதில் ஒளிந்துகொண்டிருக்கும் எலிகளை அழிக்க வேண்டும். வயலில் வரப்புகளை முடிந்தளவு குறுகியதாக அமைக்க வேண்டும். இந்த வகையில் வரப்பு அமைத்தால் எலிகளால் வளைகள் அமைக்க முடியாது. எலிகள் மறைந்து தங்கிவாழ இடமளிக்கும் வைக்கோல் போர்களை வயல்களுக்கு அருகே வைக்கக்கூடாது.
 
வயல்களிலும், வரப்புகளிலும் காணப்படும் களைகளையும் செடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவை எலிகளுக்கு மறைந்து வாழும் புகலிடமாக அமையும். கதிர் வெளிவரும் தருணத்தில் எலிகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டால் தஞ்சாவூர் வில் எலிக் கட்டிகளை ஹெக்டேருக்கு 50 என்ற அளவில் வரப்பிலிருந்து 3 மீட்டர் விட்டு கிட்டிக்கு கிட்டி 5 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும். கிட்டியில் பயன்படுத்தப்படும் நெல் பொரியுடன் சிறிதளவு வறுத்த எள்பொடியையும் கலந்தால் எலிகள் அதிகளவில் கிட்டியில் விழும் வாய்ப்பு உள்ளது.
எலிகளால் சேதம் அதிகமாகும்போது அவற்றைக் கட்டுப்படுத்த ஜிங் பாஸ்பைடு உள்ளிட்ட நச்சுமருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
நெற்பொரி அல்லது வறுத்த கம்பு மாவு, சோள மாவு, கேள்வரகு மாவு 97 கிராம், தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் 1 கிராம், ஜிங் பாஸ்பைடு 2 கிராம் என்ற அளவில் நன்றாகக் கலந்து தேங்காய் மட்டைகளிலோ, சிரட்டைகளிலோ எலிகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் ஹெக்டேருக்கு 50 இடங்களில் வைக்க வேண்டும்.
நச்சு கலந்த உணவு வைக்கப்படும் முன்பு 2 அல்லது 3 நாள்கள் நச்சு கலக்காத நல்ல உணவுப் பொருள்களை வைத்து எலிகள் அவற்றை தின்கின்றனவா என்பதை உறுதிசெய்த பின்னரே நச்சு மருந்து கலந்த உணவை வைக்க வேண்டும். மூன்று அல்லது 4 நாள்களுக்கு மட்டும் நச்சு உணவு வைத்துவிட்டு நிறுத்திவிட வேண்டும்.

Source: Dinamani (Tirunelveli) 17th July 2014 

6
Jun

நெல்லுக்கு மேல் உரமாக இயற்கை உரங்களில் பயன்படுத்துதல்

இரண்டுமுறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு 400 கிலோ முதல் 700 கிலோ தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தோடு 80 கிலோ வேப்பம்புண்ணாக்கு, ஒருகிலோ அசோபாஸ் அல்லது தலா 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து ஒருநாள் வைத்திருந்து தூவ வேண்டும். மேல் உரம் கொடுத்து 10 முதல் 15 நாட்களுக்கு பிறகு, வேளாண்மைத்துறை வெளியிட்டிருக்கும் "பச்சைவண்ண அட்டையைப் (லீப் கார்டு) பயன்படுத்தி இலைகளின் நிறத்தைப் பார்க்க வேண்டும். அதில் மூன்றாம் எண்ணுக்கு குறைவாக இருந்தால் மட்டும் மீண்டும் ஒருமுறை அதே உரக் கலவையைத் தெளிக்க வேண்டும்.

நெற்பயிரின் வளர்ச்சிக்கு இயற்கை முறை:
 மாதம் ஒருமுறை 20 லிட்டர் அமுதக்கரைசல் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை தண்ணீருடன் கலந்து விடலாம். பயிரின் வளர்ச்சியைப்பொறுத்து 25 மற்றும் 30ம் நாட்களில் மட்டும் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மிலி "பஞ்சகவ்யா' என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

அமுதக்கரைசல் தயாரிக்கும் முறை:
 மாடு ஒருதடவை போட்ட சாணம் (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்). ஒரு தடவை பெய்த மாட்டுச் சிறுநீர் இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். இப்போது அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். தெளிப்பானில் (டேங்க்) ஒருமுறை தெளிப்பதற்கான அளவு ஒரு ஏக்கருக்கு 10 தெளிப்பான் தெளிக்க வேண்டும். வாய்க்கால் நீரிலும் கலந்து விடலாம்.
நன்றி: தினமலர் 

 

27
Nov

நெல் பயிரில் புகையான் தாக்குதல்

 நெல் பயிரை தாக்கும் புகையான் பூச்சியைக் கட்டுப்படுத்த பின்வரும் தொழில்நுட்பங்களைக் கையாண்டு பயிரைக் காக்கலாம் என்று, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் சே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கார், சம்பா பருவத்தில் நெல் பயிரை குறிப்பாக, ஐ.ஆர்.-64, பிபிடி மற்றும் ஜலகர பொன்னி போன்ற ரகங்கள் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
அறிகுறிகள்: இந்தப் பூச்சி தாக்கும் வயல்களில் வட்ட வட்டமாக பயிர்கள் தீயில் காய்ந்தது போலக் காணப்படும். இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் முற்றிலும் காய்ந்து விடும்.
நெல் பயிரின் தண்டு உடைந்து சாய்ந்துவிடும். இதனால், மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும். தண்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசும்.
இந்த வகையான புகையான் பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் நெல் பயிரின் தண்டுப் பகுதியின் அடியில் நீர்ப்பகுதிக்கு சற்று மேலே இருந்து கொண்டு தண்டின் சாற்றை உறிஞ்சி எடுக்கும்.
இதனால், தண்டுப் பகுதி செயலிழந்து மடிந்து பயிர்கள் சாய்கின்றன. தண்ணீர் தேங்கியுள்ள வயல்களிலும், தழைச் சத்து அதிகம் இட்ட வயல்களிலும் இந்தப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, பயிர் பால் பிடிக்கும் முன்பே காந்து பதராகிவிடும். ஆகையால், பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை கையாள்வது அவசியமாகிறது.
புகையான் கட்டுப்பாடு முறைகள்: பயிருக்கு அதிக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
யூரியாவை மேலுரமாக 3 அல்லது 4 முறை பிரித்து இட வேண்டும். நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும். வயலில் உள்ள நீரை சுத்தமாக வடித்துவிட்டு வேர்களில் நன்குபடும்படி கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூப்பதற்கு முன்பு: 5 சத வேப்பங்கொட்டை கரைசல், இமிடா குளோப்ரிட் 200 எஸ்.எல். 50 மி.லி, இமிடா குளோப்ரிட் 17.8 சி.எல். 100 மி.லி., தயோ குளோப்ரிட் 240எஸ்.சி. 200 மி.லி., தயோமிதாக்சாம் 25 டபிள்யூ.ஜி 40 மி.லி., மோனோ குரோட்டோபாஸ் 36 எஸ்.எல். 500 மி.லி.
பூத்த பிறகு: வயலில் நீரை வடிகட்டிவிட்டு ஏக்கருக்கு 10 கிலோ கார்பரில் 10 சதத் தூளைப் பயிரின் அடிப் பகுதியில் படும்படி தூவ வேண்டும்.
புகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பூச்சி மருந்துகளான செயற்கை பைரிதராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினால்பாஸ் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து நெல் பயிரில் புகையான் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் சே.ராதாகிருஷ்ணன்.

 

 

File Courtesy: 
http://dinamani.com/agriculture/2013/10/31/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article1865059.ece
25
Sep

கார் நெல் பயிரில் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறை

 கடையம் வட்டாரத்தில் கார் பருவத்தில் பரவலாக சாகுபடி செய்துள்ள அம்பை 16 ரகத்தில் ஆங்காங்கே குருத்துப்பூச்சி தாக்குதல் தென்படுகிறது. குருத்துப்புச்சி தாக்குதலினால் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்படும். குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகள் நெல் பயிரின் இலைகளின் நுனியில் குவியல் குவியலாக முட்டையிடும். இம்முட்டைகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இம்முட்டையிலிருந்து வெளிவரும் இளம் மஞ்சள் நிற புழுக்கள் நெல் பயிரின் தூர்களை தாக்கி சேதம் எற்படுத்தும். நெல் பயிரின் சிம்புகள் பாதிக்கப்பட்டவுடன் அழுகி காய்ந்துவிடும். கையினால் இழுத்தவுடன் வந்துவிடும். பொதி பருவத்தில் தாக்குதல் ஏற்பட்டால் வெண்கதிர் வரும். எனவே கடையம் வட்டார விவசாய பெருமக்கள் கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை தற்போது தவறாது கார் நெல் சாகுபடியில் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கார்நெல் சாகுபடியான வயல் வரப்புகளில் களைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்கவேண்டும். குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒரு ஏக்கரில் 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து குருத்துப்பூச்சியின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும். ஒரு ஏக்கரில் 5 விளக்கு பொறிகளை வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கவேண்டும். வேப்பம் புண்ணாக்கு கரைசல் 5 சதம் அல்லது வேப்பம் எண்ணெய் மருந்தை தெளித்து குருத்துப்பூச்சிகள் முட்டை இடுவதை தவிர்க்கலாம்.முட்டைகளை அழிக்கக்கூடிய நன்மை செய்யும் ஒட்டுண்ணியான ட்ரைகோகிராம்மா ஜப்பானிக்கம் பயன்படுத்த வேண்டும். நடவு வயலில் இளம் குருத்துகள் பாதிப்பு 10சதவீதத்திற்கு மேல் காணப்பட்டால் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றுடன் டேங்கிற்கு 10 மி.லி., ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். புரொப்பன்னாபாஸ் 2 மில்லி நீர்(400மிலி/ஏக்கர்) அல்லது கோரஜன் 60மில்லி/ஏக்கர், கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 1.5 கிராம்/லிட்டர் நீர் (300கிராம்/ஏக்கர்). நெல் நடவு வயலில் ஒரே நேரத்தில் தழைச்சத்து உரங்களை அதிகளவில் இடக்கூடாது. மூன்று நான்கு தடவைகளாக பிரித்து இடவேண்டும். எக்காரணத்தை கொண்டும் ஒரு தடவையில் ஏக்கருக்கு 25 கிலோவிற்கு மேல் யூரியா உரமிடக்கூடாது. அடியுரமாக 17 கிலோ பொட்டாஷ் மற்றும் இரண்டாவது மேலுரமிடும்போது (நடவு செய்த 30வது நாள்) 17 கிலோ பொட்டாஷ் உரத்தினை ஒரு ஏக்கருக்கு இடவேண்டும். திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்தால் குருத்துப்பூச்சி தாக்குதல் குறையும். ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை கலந்து தெளிக்ககூடாது. சிபாரிசு செய்யப்படும் அளவு பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். அடிக்கடி தேவையில்லாமல் பூச்சி மருந்து தெளிக்கக்கூடாது. பொருளாதார சேதநிலை அறிந்து தெளிக்க வேண்டும். நடவு செய்த உடன் 1 ஏக்கரில் 5 எண்கள் குருத்துப்பூச்சி இனக்கவர்ச்சி பொறிகளை வைத்தால் நெல் பயிரில் பூச்சி மருந்து அடிக்காமல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்தலாம். இனக்கவர்ச்சி பொறிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையம் கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சியை தொடர்பு கொள்வும். எனவே கடையம் வட்டார விவசாய பெருமக்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து நடப்பு கார் பருவத்தில் குருத்துப்பூச்சி தாக்குதலை தவிர்த்து அதிக மகசூல் பெற கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணபிள்ளை கேட்டுக்கொள்கிறார்.

File Courtesy: 
http://www.dinamalar.com/news_detail.asp?id=812174
11
Sep

நெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுவை தடுக்கும் முறைகள்

 வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது நெல்லை மாவட்டம் கடையம் வட்டாரத்தில் பரவலாக நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும். பெத்தான்பிள்ளைகுடியிருப்பு, சம்பன்குளம், ஆம்பூர் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சாவித்திரி நெல் பயிரில் இலைசுருட்டுப்புழு தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
இப்பூச்சிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் காணப்படுகிறது. மழை குறைவாகவும், மேகமூட்டமாக இருக்கும் சூழலில் இவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். தாய் அந்துப் பூச்சிகள் வெளிரிய பழுப்பு நிறத்தில் பளபளக்கும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற இறக்கையுடன் காணப்படும்.
வயல்கள் மற்றும் வரப்புகளில் உள்ள புற்களை நீக்கி வயலைச் சுத்தமாக வைத்திட வேண்டும். அதிகமாக தழைச்சத்து அதாவது யூரியா போட்ட வயல்கள், குருனை மருந்தான போரேட், கார்போபியூரான் போடப்பட்ட வயல்களில் பாதிப்பு அதிகமாக காணப்படும். நிழல் உள்ள இடங்களில் மற்றும் பயிர் நெருக்கமாக அதிக தழைச்சத்து பெற்று வளமாக இருக்கும் இடங்களில் முதலில் தாக்குதல் தென்படும் தழைச்சத்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோவுடன் 35 கிலோ பொட்டாஷ் உரத்தை இரு தடவையாக பிரித்து இடவேண்டம். மேலும் ஒரு ஏக்கருக்கு டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் ஓட்டுண்ணியை 5சிசி என்ற அளவில் வாரம் ஒரு முறை வயலில் உலவ விட்டால் இப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
பூச்சி மருந்தை காலை அல்லது மாலை வேளைகளில் வயலில் நீரை நன்கு வடித்துவிட்டு ஒரே மருந்தை திரும்ப திரும்ப தெளிக்காமல் மருந்துகளை சுழற்சி முறையில் அடித்து பூச்சிகளை தடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Source: 
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=618316 (as on Jan 2, 2013)

For more information in English- Click Here 

6
Sep

மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரி (Improved Samba Mahsuri)

ஆந்திராவில் உள்ள, நெல் ஆராய்ச்சி இயக்குனரகம்(Directorate of Rice Research, Rajendranagar, Hyderabad)உருவாக்கியுள்ள ரக நெல் பாக்டீரியா நோய் (Bacterial leaf blight) தாக்குதலை சமாளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நெல் ரகம் "மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரி' (Improved Samba Mahsuri) என அழைக்கப்படுகிறது. இந்த ரகமானது உயிரி தொழில்நுட்பக் கருவிகளில் ஒன்றான, மார்க்கெர் அசிஸ்டட் செலக்ஷன்(Marker Assisted Selection) மெத்தடாலஜியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண் பல்கலைக் கழகத்தின் பிரசித்தி பெற்ற ரகமான சம்பா மசூரி (பீபிடி5204) ரகம் கூட, பாக்டீரியா நோய் தாக்குதல்களுக்கு ஆளாகக் கூடியது. ஆனால், மேம்படுத்தப்பட்ட சம்பா மசூரியில், அப்பிரச்னை இல்லை.

Contributed by arunswarnaraj on Sat, 2012-09-01 09:55

Read about Improved Samba Mahsuri
ఇంప్రూవ్డ్ సాంబమసూరి

Check for seed availability 

23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் அறுவடை

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் அறுவடை

1. பயிரின் சராசரி வயதை பொறுத்து, அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் நீரை வடித்தால், அறுவடை எளிதாக இருக்கும்

2. 80% கதிர்கள் வைக்கோல்நிறத்திற்கு வரும்போது, பயிர் அறுவடைக்கு தயாராகிறது. சில இரகங்களில், இந்த நிலையிலும் பயிர் பச்சையாகவே இருக்கும்

3. நன்கு முற்றிய கதிரை தேர்ந்தெடுத்து, நெல்லை உதிர்த்து பார்க்கவும். அரிசி திடமாகவும் தெளிவாகவும் இருந்தால், பால் முற்றும் தறுவாயில் உள்ளது என அறியலாம்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடி – நீர் பாசனத்தில் முக்கிய விஷயங்கள்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடி – நீர் பாசனத்தில் முக்கிய விஷயங்கள்

1. நீர் ஆதாரத்தை பொறுத்து, பாத்திகள் 25 முதல் 50 செண்ட் வரை இருக்கலாம்.

2. ஒரு நிலத்திலிருந்து இன்னொரு நிலத்துக்கு பாசனம் செய்வதை தவிர்க்கவும். வாய்க்காலில் இருந்து நேரடியாக பாசனம் செய்யவும்

3. நீர்க் கசிவு மூலம் இழப்பை தவிர்க்க, முக்கிய வரப்புக்கு இணையாக 30-45 செமீ அகல சிறிய வரப்பு அமைக்கவும்.

4. ஊடுருவல் மூலம் நீர் இழப்பை தவிர்க்க, 5 செமீ மேல் நீர் நிற்காதவாறு பாசனம் செய்யவும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் நீர் நிர்வாகம்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் நீர் நிர்வாகம்

1. சேறாக்குதல் மற்றும் நிலம் சமப்படுத்துதல் ஆகியவை நீர் தேவையை குறைக்கும்

2. கேஜ் வீல் கொண்ட டிராக்டர் மூலம் உழுது நீர் இழப்பை 20% வரை குறைக்கலாம்.

3. 2.5 செமீ உயரம் நீரை நிறுத்தி, குறைந்த நார்ப்பொருள் கொண்ட பசுந்தாள் பயிரான சணப்பை 7 நாட்களூக்கும், அதிக நார்ப்பொருள் கொண்ட கொழுஞ்சி போன்ற பயிர்களை 15 நாட்களுக்கும் மக்க வைக்கவும்.

4. நடவு செய்யும் போது, 2 செமீ நீர் மட்டும் வைக்கவும்: ஏனென்றால், அதிக ஆழம் இருந்தால், நாற்றுகள் ஆழமாக நடப்பட்டு, கிளைத்தல் குறையும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் களை நிர்வாகம்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் களை நிர்வாகம்

1. ரோட்டரி களைக்கருவியை நடவு செய்த 15 நாட்களிலிருந்து, 10 நாட்காளுக்கு ஒரு முறை பயன்படுத்தவும். இதனால், கூலியாள் செலவு குறைதல், வேர்ப்பகுதி மண்ணில் காற்றோட்டம் அதிகரித்தல், வேர் வளர்ச்சி அதிகரித்தல், மணி முற்றுதல் அதிகரித்து மககூல் கூடுதல் ஆகியவை ஏற்படும்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
http://agritech.tnau.ac.in/agriculture/agri_cropproduction_cereals_rice_tranpudlow.html
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் வேம்பு அல்லது தார் பூசிய யூரியா பயன்படுத்துதல்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் வேம்பு அல்லது தார் பூசிய யூரியா பயன்படுத்துதல்

File Courtesy: 
TNRRI - Aduthurai
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சத்துகள் பற்றாக்குறை அல்லது விஷத்தன்மை

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சத்துகள் பற்றாக்குறை அல்லது விஷத்தன்மை

1. தழைசத்து பற்றாக்குறை: செடிகள் உயரம் குறைந்து, கீழ் இலைகள் முதலில் மஞ்சளாக தோன்றும். தீவிரமான பற்றாக்குறை இருந்தால், இலைகள் பழுப்பு நிறமாக மாறி பின்னர் இறந்துவிடும். அறிகுறிகள் முதலில் இலை நுனியில் தோன்றி, நடு நரம்புக்கு பரவி, பின்னர் முழு இலையும் பாதிக்கப்பட்டு இறந்துவிடும்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
http://arkansasrice.blogspot.com/2010/06/sulfur-and-potassium-deficiency-in-rice.html
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சிங்க் சல்பேட் நிர்வாகம்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சிங்க் சல்பேட் நிர்வாகம்

1. 25 கிலோசிங்க் சல்பேட்டை 50 கிலோ காய்ந்த மணலுடன் கலந்து, நடவு செய்யும் முன் இடவும்.

2. வயலில் பசுந்தாள் பயிர்கள் (எக்டருக்கு 6.25 கிலோ) அல்லது ஊட்டமேற்றிய தொழு உரம் இட்டிருந்தால், 12.5 கிலோ போதுமானது.

3. பற்றாக்குறை அறிகுறிகள் தென்பட்டால், 0.5% சிங்க் சல்பேட் + 1.0 % யூரியா ஆகியவற்றை, இலை வழி ஊட்டமாக 15 நாட்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரை தெளிக்கவும்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் மணிச்சத்து இடுதல்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் மணிச்சத்து இடுதல்

  • மணிச்சத்தை அடியுரமாக இடவும்
  • பசுந்தாள் பயிர் இட்ட வயலில், குறைந்த செலவிலான ராக் பாஸ்பேட்டை பயன்படுத்தலாம். ராக் பாஸ்பேட் இட்ட வயலில், அடுத்த போகத்தில் மணிச்சத்து இட வேண்டிய அவசியம் இல்லை.  
  • சூப்பர் பாஸ்பேட் அல்லது டி.ஏ.பி ஆகியவற்றை தனியாக இடுவதை போலவே, வெவ்வேறு அளவுகளில் (75:25 அல்லது 50:50) ராக் பாஸ்பேட் + சூப்பர் (அ) டி.ஏ.பி இடுவதும் சமமான நன்மை தரக்கூடியவை.
File Courtesy: 
TNRRI - Aduthurai
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில், இலை வண்ண அட்டையைக் (LCC) பயன்படுத்தி, தழைசத்தை நிர்வாகம் செய்தல்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில், இலை வண்ண அட்டையைக் (LCC) பயன்படுத்தி, தழைசத்தை நிர்வாகம் செய்தல்

1. இலை வண்ண அட்டை மதிப்பீட்டின் அடிப்படையில் உரமிடும் நேரம் தீர்மானிக்கப்படுகிறது

2. நடவுமுறை வயலில் நடவு செய்த 14-ம் நாளிலும், நேரடியாக விதைத்த வயலில் விதைத்த 21 நாட்களிலும் கணக்கீடு செய்யவும்.

3. கதிர்கள் வெளியாகும் வரை, இவ்வாறாக வாரம் ஒரு நாள் கணக்கீடு செய்யவும்

File Courtesy: 
TNRRI - Aduthurai
Image Courtesy: 
Dr.RM Kumar, DRR
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் தழை மற்றூம் சாம்பல் சத்துக்களை பிரித்து இடுதல்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் தழை மற்றூம் சாம்பல் சத்துக்களை பிரித்து இடுதல்

1. அடியுரம், கிளைகள் வெடித்தல், கரு உருவாதல், கதிர் வெளியாதல் ஆகிய நான்கு பருவங்களில், தழை மற்றும் சாம்பல் சத்துக்களை சமமாக பிரித்து இடவும்

2. கிளைகள் வெடித்தல், கரு உருவாதல் ஆகிய இரண்டும் முக்கிய பருவங்கள்: பரிந்துரைக்கப்பட்ட உர அளவுகளை குறைக்கக் கூடாது

3. இலை வண்ண அட்டையைக் (LCC) கீழ்கண்ட வழிமுறையில் பயன்படுத்தி, தழைசத்தை நிர்வாகம் செய்யலாம்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சத்து நிர்வாகம்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் சத்து நிர்வாகம்

1. எரு இடுதல்: எக்டருக்கு 12.5 டன் மக்கிய எரு அல்லது கம்போஸ்ட் அல்லது 6.25 டன் பசுந்தழைகள்

2. வயலில் பசுந்தாள் பயிர்கள் (எக்டருக்கு 20 கிலோ) வளர்த்திருந்தால், 15 செமீ ஆழத்தில் இருக்குமாறு, தழை அமுக்கும் கருவி அல்லது டிராக்டர் கொண்டு மடக்கி உழவு செய்யவும்

3. பசுந்தழைக்கு பதிலாக, கரும்பு சக்கை, தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

கழிவுகளை உழுதல்:

File Courtesy: 
TNRRI - Aduthurai
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் வயதான நாற்றுகள் நிர்வாகம்

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் வயதான நாற்றுகள் நிர்வாகம்

1. குறைந்த அல்லது மத்திம வள மண்ணூக்கான இடைவெளி பரிந்துரையை பின்பற்றவும்

2. ஒரு குத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாற்றுகள் மட்டும் நடவு செய்யவும்

3. வயதான நாற்றுகளை நடவு செய்யும்போது, கிளைகள் உருவாகுவதற்கு தடையாக இருக்கும் கொத்து நடவை தவிர்க்கவும்

4. புதிய கிளைகளில் மட்டுமே கதிர்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. திறன் குறைவான கதிர்கள், தாய் கிளையிலிருந்து 3 வாரங்கள் கழித்து உருவாகி, பின் அறுவடைக்கு முன் மறைந்துவிடும்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் நாற்று நடவு செய்தல் - Planting seedlings in the main field for Transplanted puddled lowland rice

 

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் நாற்று நடவு செய்தல் - Planting seedlings in the main field for Transplanted puddled lowland rice

1. குறுகியகால இரங்களுக்கு குத்துக்கு 2-3 நாற்றுகள், நீண்டகால இரகங்களுக்கு குத்துக்கு 2 நாற்றுகளும் நடவு செய்யவும்

2. மேலான நடவு (3 செமீ ஆழம்) விரைவான வளர்ச்சி மற்றும் அதிக கிளைகள் கிடைக்க வழி செய்யும்

3. ஆழமான நடவு (5 செமீ ஆழத்திற்கு மேல்) தாமதமான வளர்ச்சி மற்றும் கிளைகள் குறைய காரணமாகிவிடும்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
23
Sep

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் உயிர் உர வேர் நனைத்தல் நேர்த்தி - Root dipping for Transplanted puddled lowland rice

நடவு முறையில் பயிர் செய்யப்படும் தாழ்நில நெல் சாகுபடியில் உயிர் உர வேர் நனைத்தல் நேர்த்தி - Root dipping for Transplanted puddled lowland rice

1. எக்டருக்கு தலா 5 பாக்கட் (1000 கிராம்) அஸோஸ்பைரில்லம், 5 பாக்கட் (1000 கிராம்) பாஸ்போபாக்டீரியா (அல்லது) 10 பாக்கட் (2000 கிராம்) அஸோபாஸ் ஆகியவற்றை 40 லிட்டர் நீரில் கரைத்து, நடவு செய்யும் முன் 15-30 நிமிடங்களுக்கு நாற்றின் வேர்ப்பகுதியை நனைத்து நடவும்.

File Courtesy: 
TNRRI - Aduthurai
Syndicate content
Copy rights | Disclaimer | RKMP Policies